இலங்கை செய்தி

2019 இல் நியூசிலாந்து நோக்கி பயணித்த 248 பேருக்கு என்ன நேர்ந்தது : வெளியாகிய புதிய தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

2019 இல் நியுசிலாந்திற்கு ஆபத்தான  கடல் பயணத்தை மேற்கொண்ட 248 இலங்கையர்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி குறித்த 248 பேரும் காணாமல்போயிருக்கலாம் என  நியுசிலாந்தின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2019  ஜனவரி 12ம் திகதி ஆட்கள் பயணிக்கும் படகாக மாற்றப்பட்ட 27 மீற்றர் மீன்பிடிப்படகு இந்தியாவிலிருந்து 248 தமிழர்களுடன் புறப்பட்டது. அந்த படகு அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்தை சென்றடைய முயற்சி செய்திருக்கலாம் என நியுசிலாந்து அரச ஆவணங்கள் தெரிவித்துள்ளன.. அதன்பின்னர் அந்த படகிலிருந்தவர்கள் குறித்து […]

இலங்கை செய்தி

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள 23 கப்பல்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் 23 கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியுடன்  குறித்த 23 கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக அனல்மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் கூறுகிறார். மேலும் தற்போது சுமார் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் சர்வதேச தரங்களுக்கு அமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதையும் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டு […]

இலங்கை செய்தி

லங்கா IOC நிறுவனமும் 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்தியது!

  • April 12, 2023
  • 0 Comments

லங்கா  IOC    நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. QR  முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞசு குறியீட்டை மீறி தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்து வந்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நேற்று 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானித்தது.

இலங்கை செய்தி

திருகோணமலையில் மீனவ குழுக்களிடையே மோதல்; களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்!

  • April 12, 2023
  • 0 Comments

திருகோணமலை விஜிதபுர பகுதியில் தமிழ் – சிங்கள   மீனவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  பொலிஸ் அதிரடிப்படையின களமிறக்கப்பட்டுள்ளனர். மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறின்போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மோதல்  நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

செய்தி

பதவிக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

  • April 12, 2023
  • 0 Comments

னது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin),  ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்களை சந்தித்தார். தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin),  தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அவரின் எதிர்கால பணிகள் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் தொடர்பான […]

இலங்கை செய்தி

ஐரோப்பா செல்ல முயன்று கடலில் தத்தளித்த 440 புகலிட கோரிக்கையாளர்களில் இலங்கையர்கள்

  • April 12, 2023
  • 0 Comments

மோல்டாவிற்கு அருகே மத்தியதரைக்கடலில் மீட்கப்பட்ட 440 புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் சீற்றத்தால்  நிர்க்கதியாகியிருந்த நிலையில் இந்த புகலிட கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர். எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் தலையீட்டுடன் இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் மீன்பிடி படகில் ஏறி சுமார் நான்கு நாட்களாக புயல் சீற்றம் கொண்ட கடலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இறுதி […]

இலங்கை செய்தி

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்!

  • April 12, 2023
  • 0 Comments

அண்மையில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றினைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலான தவறான அறிக்கையிடலை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது. அத்தகைய ஊடக அறிக்கைகள் ‘பொருளாதாரத்தில் கடினமானதொரு காலகட்டத்தினை ஆளுநர் எதிர்பார்க்கின்றார் எனக் குறிப்பிட்டிருந்தன. எதிர்பார்க்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் தாமதமானாலோ அல்லது தடம்புரள்வினை எதிர்கொண்டாலோ எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த கலந்துரையாடலின் பின்னணியில் ஆளுநரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களிற்கு ஒட்டுமொத்தமாகத் தவறான பொருட்கோடலாக இது காணப்படுகின்றது. 2022இல் காணப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத சமூக-பொருளாதார பதற்றங்களுடன் […]

இலங்கை செய்தி

பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்

  • April 12, 2023
  • 0 Comments

தமிழ்  – சிங்களப் புத்தாண்டு  காலத்தில் பொது மக்களுக்கு  பாதிப்பு  ஏற்படாதவாறு  வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்  சிரேஷ்ட  ஆலோசகரும்  ஜனாதிபதி  பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க  தெரிவித்தார். கொழும்புத்துறை  வியாபாரச்  சங்கம்  மற்றும்  நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன்  நேற்று  (06)   ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்ற  சந்திப்பொன்றின் போது சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு  தெரிவித்தார். இதன்போது   நடைபாதை வியாபாரிகளுடன்  சுமூகமாக கலந்துரையாடிய […]

இலங்கை செய்தி

அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார்

  • April 12, 2023
  • 0 Comments

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  அரச சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார் சனத் ஜெயந்த தலைமையிலான இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக திருமதி சித்தி  மரீனா மொஹமட், திரு நரசிங்க ஹேரத் முதியன்சலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமரன் ,திரு. மானிக்க படதுருகே ரொஹன புஷ்பகுமார, கலாநிதி . அங்கம்பொதி தமித நந்தனி […]

Skip to content