ஐரோப்பா செய்தி

நெஸ்ட்லே தொழிற்சாலைக்கு வந்த பார்சல்கள்.. பிரித்துப் பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

  • April 14, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்திலுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் பானங்கள் தயாரிக்கும் நெஸ்ட்லே தொழிற்சாலைக்கு சில பார்சல்கள் வந்தன.அவற்றில் காபிக்கொட்டைகளுக்கு நடுவே போதைப்பொருள் அடங்கிய பொட்டங்கள் இருந்ததால் தொழிற்சாலை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காபிக்கொட்டைகளுக்கு நடுவே போதைப்பொருள் அடங்கிய பொட்டங்கள் இருந்ததால், சுங்க அதிகாரிகளுக்கு அது குறித்து உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.அதிகாரிகள் வந்து அந்த பொட்டலங்களைக் கைப்பற்றினர். அவற்றில் 500 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருந்தது.   இந்நிலையில், நேற்று தபால் மூலம், குறிப்பாக வட ஆப்பிரிக்காலிருந்து அனுப்பப்பட்ட போதைப்பொருட்களையும் தாங்கள் கைப்பற்றியதாக […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் சிக்கியுள்ள பெற்றோலிய வாயு டேங்கர்கள் : மாற்று வழிகளை தேடும் வர்த்தகர்கள்!

  • April 14, 2023
  • 0 Comments

பெற்றோலிய வாயு ஏற்றப்பட்ட பல டேங்கர்கள் ரஷ்யாவில் சிக்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பொருட்கள் ரஷ்யாவின் கிரைமியா பாலத்தை கடக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்விளைவாக எரிவாயு ஏற்றப்பட்ட டேங்கர்கள் அங்கு சிக்கியுள்ளதாகவும், மாற்று வழிகளை தேடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பா செய்தி

உக்ரைனை பாதுகாக்கும் முயற்சியில் பெலாரஸ்ய கெரில்லாக்கள்!

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில் உக்ரைனை பாதுகாக்கும் முயற்சில் பெலாரஸ்ய கெரில்லாக்கள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரஷ்யா தங்களுடைய இராணுவ தளவாடங்களை பெலாரஷ் வழியாக கொண்டுசெல்கிறது. இதற்காக ரஷி;யாவில் இருந்து பெலாரஷ் நோக்கி பயணிக்கும் ரயில் ஒன்று பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் உக்ரைனில் போரிடும் ரஷ்யர்களுக்கான ஆயுத விநியோகத்தை தடுக்கும் வகையில், பெலாரஸ் நாட்டின் இரயில் கடவைகளை தகர்க்கும் முயற்சியில் பெலாரஸ் கெரில்லாக்கள் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த […]

ஐரோப்பா செய்தி

தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ரஷ்யா : 11 பொதுமக்கள் கொல்லப்பட்தாக அறிவிப்பு!

  • April 14, 2023
  • 0 Comments

தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ரஷ்யா : 11 பொதுமக்கள் கொல்லப்பட்தாக அறிவிப்பு! ரஷ்யா – உக்ரைன் போரில் கடந்த இரண்டு நாட்களாக ரஷ்ய படையினர் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் உக்ரைன் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலின்போது ரஷ்யா உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து 80 நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஐரோப்பாவின் […]

ஐரோப்பா செய்தி

யார்க்ஷயர் மற்றும் நார்த் வேல்ஸ் ஆகிய பகுதிவாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

  • April 14, 2023
  • 0 Comments

யார்க்ஷயர் மற்றும் நார்த் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் இரண்டு அம்பர் வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இது இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் பனிப்பொழிவுக்கான நான்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு நோர்த் வேல்ஸ் பொலிஸார் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி தேவைப்பட்டால் மாத்திரம் வெளியே செல்லுமாறு பரிந்துறைத்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷயரில் […]

ஐரோப்பா செய்தி

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ஏவுகணையை கையில் எடுத்துள்ள ரஷ்யா!

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைனில் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய கின்ஸல் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் முக்கிய பகுதிகள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையம் அருகே ஒரு ஏவுகணை வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் WhatsApp பாதுகாப்பைக் குறைக்க திட்டம் – தடை செய்ய கூறும் நிறுவனம்

  • April 14, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இணையப் பாதுகாப்பு மசோதாவின் கீழ் WhatsApp சேவையின் encrypted-messaging அமைப்பு என்கிற பாதுகாப்பு அம்சத்தை வலுவற்றதாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதற்கு பதில் தடை செய்வதே மேல் என்று WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது WhatsApp சேவையில் உள்ள encrypted-messaging அமைப்பால், அந்த நிறுவனத்தால் கூட பயனீட்டாளர்களின் செய்திகளைப் படிக்க முடியாது. ஆனால் இணையத்தில் குழந்தைத் துன்புறுத்தல் பிரச்சினையைக் கையாள்வதற்கான முயற்சிகளுக்கு அது தடையாய் இருப்பதாகப் பிரித்தானிய அரசாங்கமும் குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளும் கூறுகின்றன. பிரித்தானியாவில் WhatsApp […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்கு காத்திருக்கும் மற்றுமொரு அதிர்ச்சி !

  • April 14, 2023
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் ரஷ்யா நேரடியான ராணுவ மோதலை விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. அமெரிக்க உளவுத் துறை தகவல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது, மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் உறவை வேறு கோணத்தில் மாற்றியுள்ளது. இதனால் மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்கும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதென கூறப்படுகின்றது. இந்த நிலையில், ரஷ்யா ராணுவ மோதலை விரும்பாத போதும், மோதல் நிகழ வாய்ப்புள்ளதாக உளவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் கடுமையான நெருக்கடி – மாணவர்கள் சிக்கலில்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டில் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இப்பொழுது பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மக்கள் சனத்தொகை அதிகமான நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் எண்ணாயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் பல கல்வி கற்ற ஆசிரியர்கள் தொடர்ந்தும் ஆசிரியர் பதவியில் இருக்க விரும்புகின்றார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படிருக்கின்றது. குறிப்பாக பாடசாலையில் பாடசாலை மாணவர்களுடைய வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதால் இவ்வாறான சூழ்நிலையை ஆசிரியர்களால் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த உளவுத்துறையினர்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இணையத்தள பாவனையாளர்களுக்கு உளவு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலக்கட்டங்கில்  உலகளாவிய ரீதியில் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்கள்  அதிகரித்து வருகின்றது. இந்த இணைய தளங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்ளும் குழு ஒன்றை ஜெர்மனிய நாட்டின் உளவு துறையினர் கண்டுப்பிடித்திருக்கின்றார்கள். உலகளாவிய ரீதியில் மேற்குலக நாடுகளில் உள்ள இணையத்தளங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றது. பல நாடுகளில் இணையத்தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வோரை பிடிப்பதற்காக பல உளவு துறைகள் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு  இணையத்தளங்கள் மீது தாக்குதல்களை […]

Skip to content