ஆப்பிரிக்கா

எகிப்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழப்பு!

  • May 5, 2023
  • 0 Comments

தென்மேற்கு எகிப்தில் பயணிகள் பேருந்தொன்றுடன், லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை. வேகம் மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது

இலங்கை செய்தி

காதலியை கட்டையால் அடித்து கொன்ற காதலன்

  • May 5, 2023
  • 0 Comments

காதலியை கட்டையால் அடித்து கொன்ற காதலன் இன்று (05) பல்லேகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். காதலிக்கு வேறு காதலர்கள் உள்ளனர் என்ற சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு

நைஜீரியாவில் பயங்கரவாத குழுவை சேர்ந்த 40 பேர் கொலை!

  • May 5, 2023
  • 0 Comments

நைஜீரியா நாட்டில் பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரச அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி கடந்த 2 வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த குழுவினரின் குடும்பத்தினர் குழந்தைகள் உள்பட 510 பேர் அரசிடம் சரண் அடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

வெசாக் காண கொழும்புக்கு வரும் மக்கள் வாகனம் நிறுத்தும் இடங்கள்

  • May 5, 2023
  • 0 Comments

கொழும்பு நகரில் வெசாக் அதிசயத்தை காண வரும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களை பொலிஸார் ஒதுக்கியுள்ளனர். அதன்படி புத்தலோக வெசாக் வலயம், புத்த ரஷ்மி வெசாக் வலயம் மற்றும் காலி மவுத் ஜனாதிபதி அலுவலக வெசாக் வலயத்தின் அழகை காண வரும் மக்களுக்காக வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய 350 வைத்தியர்கள்!

  • May 5, 2023
  • 0 Comments

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 350 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் பணியாற்றுவதற்கு 2837 விசேட வைத்திய நிபுணர்களும்  23000 பொது வைத்தியர்களும் தேவைப்படுகின்றனர். இந்நிலையில்  தற்போது 50 விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் 250 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளனர். நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதற்கு இடையூறாக […]

உலகம் செய்தி

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • May 5, 2023
  • 0 Comments

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் உள்நாட்டில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக நாகானோ மற்றும் கனாசாவா இடையேயான ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவும் ஏற்படக்கூடும் என நாட்டின் அனர்த்த திணைக்களங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ள போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பின் அளவு அதிகரிப்பு!

  • May 5, 2023
  • 0 Comments

இலங்கையின் வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 2.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி கடந்த மார்ச் மாதம் 2694 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்த வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு கடந்த ஏப்ரல் மாதத்தில் 2இ755 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. அண்மைய சில மாதங்களாக 360 ஆகக் காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதிஇ தற்போது சுமார் 320 ரூபா என்ற மட்டத்தில் பேணப்பட்டுவருகின்றது. மறுபுறம் சர்வதேச நாணய நிதியத்துடன் […]

இலங்கை செய்தி

கொழும்புக்கு இலவச பயணிகள் ரயில்

  • May 5, 2023
  • 0 Comments

  பெலியத்தையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ரயிலில் பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்ல ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஹட்டன் பகுதியில் உள்ள பஸ் உரிமையாளர் ஒருவர் இன்று (05) பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

ஐரோப்பா

மங்கலாகிச் சென்ற பார்வை… மருத்துவ சோதனையில் 7 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • May 5, 2023
  • 0 Comments

வடக்கு லண்டனின் ஹாரோ பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியின் பார்வை மங்கலாக தெரிய, மருத்துவ சோதனையில் கண்டறிந்த தகவல் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. ஹாரோ பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி சாரா அதிஃப் என்பவர் தமது கண் பார்வை மங்குவதையும் சோர்வாக இருப்பதை அடிக்கடி தமது தாயாரிடம் கூறி வந்துள்ளார். இது அவரது தாயார் உரோஸ் என்பவருக்கு கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.இதனையடுத்து சிறுமி சாரா கண் பரிசோதனைக்காக மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள். ஆனால் […]

உலகம் ஐரோப்பா

சேர்பியாவில் துப்பாக்கிச்சூடு : 8 பேர் பலி!

  • May 5, 2023
  • 0 Comments

சேர்பியாவில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிலாடேனோவாக் நகருக்கு அருகிலுள்ள 3 கிராமங்களில் இச்சம்பவம் இடம்பெற்றள்ளது என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரவு முழுவதும் நடந்த தேடுதலையடுத்து, 21 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என சேர்பிய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். சேர்பியாவில் இரு நாட்களில் நடந்த […]