இலங்கை செய்தி

தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி| மக்கள் அவதானம்

  • May 7, 2023
  • 0 Comments

  ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி கொழும்பு பகுதியில் இளைஞர்களிடம் பணம் பெற்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள 5 இளைஞர்களிடம் பெண் 25 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பண மோசடியில் சிக்கிய இளைஞர்கள் பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அனுப்பிய […]

அறிந்திருக்க வேண்டியவை ஐரோப்பா

பிரித்தானியாவில் குடியுரிமையை பெற அறிந்திருக்க வேண்டிய சில விடயங்கள்!

  • May 7, 2023
  • 0 Comments

பிரித்தானியக் குடியுரிமையைப் பெற விரும்புபவர்கள், அங்கு தேர்வுகளை எழுத வேண்டும். அந்த தேர்வில் ஏறக்குறைய 18 தொடக்கம் 24 கேள்விகள் அடங்கியிருக்கும். பொதுவாக அந்த நாட்டிலேயே பிறந்து கல்வி கற்றவர்கள் கூட  தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கினர், தேர்ச்சி அடையவில்லை என்பதைதான் காட்டியுள்ளன. இந்த தேர்வினை எழுதுவதற்கு £50  செலவாகும். ஒருவர் 64 முறை தேர்வினை எழுத முடியும். ஆனால்  ஒவ்வொரு கேள்விகளும் முதல் […]

இலங்கை செய்தி

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

  • May 7, 2023
  • 0 Comments

  சீரற்ற காலநிலையால் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை, பதுளை, குருநாகல் ,கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (07) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

ஐரோப்பா

ரஷ்யாவில் 10 ஆண்டுகளில் மிக மோசமான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்!

  • May 7, 2023
  • 0 Comments

கோவிட் மற்றும் போர் ரஷ்யாவில் “பத்தாண்டுகளில் மிக மோசமான தொழிலாளர் பற்றாக்குறையை” ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் ராணுவ உளவுத்துறைத்  தெரிவித்துள்ளது. இது குறித்து 14 ஆயிரம் முதலாளிகளிடம் ரஷ்ய வங்கி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின்படி, 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2022 இல் நாட்டை விட்டு வெளியேறிய 1.3 மில்லியன் மக்களில் பலர் அதிக மதிப்புள்ள தொழில்களில் பணிப்புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் […]

ஐரோப்பா

உக்ரைனில் ஒரே இரவில் 10 மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிப்பு!

  • May 7, 2023
  • 0 Comments

உக்ரைன் ஒரே இரவில் 10 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக  ரஷ்ய ஆதரவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செவாஸ்டோபோல் துறைமுகம் மூன்று பேரால் தாக்கப்பட்டதாக தெரிவித்த அவர்,  எந்த பொருட்களும் சேதம் ஏற்படவில்லை என்றும்  மாஸ்கோவில் நிறுவப்பட்ட கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் கூறினார். குண்டுவெடிப்புகளில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

பெவிகுயிக் போட்டு வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்

  • May 7, 2023
  • 0 Comments

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கீழே விழுந்து வெட்டுக் காயம் அடைந்த சிறுவனுக்கு பெவிகுயிக் போட்டு சிகிச்சை பார்த்த மருத்துவரின் கிளினிக்-கை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து அடைத்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தின் அலம்பூர் நகரை சேர்ந்த பிரணவ் என்ற சிறுவன், கால் தவறி கீழே விழுந்ததில் தலையின் நெற்றியில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவரது தந்தை வம்சி கிருஷ்ணா அருகிலுள்ள ரெயின்போ மருத்துவமனையில் மகனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால் சிறுவனின் வெட்டுக் காயத்திற்கு அங்குள்ள […]

ஆசியா உலகம்

ஜப்பானில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் : ஒருவர் பலி!

  • May 7, 2023
  • 0 Comments

உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் முதல் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனை அடுத்து குறித்த பகுதியில், இரண்டாவது முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த முறை […]

இலங்கை

புத்தரின் காலடியில் பச்சிளம் சிசுவை விட்டுச்சென்ற தாய்

  • May 7, 2023
  • 0 Comments

பிறந்து நான்கு நாட்களேயான சிசுவை, வத்தேகம- எல்கடுவ வீதியிலுள்ள விஹாரைக்கு அருகில் உள்ள சிறிய புத்தரின் கூண்டுக்குள் விட்டுச்சென்ற அந்த சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை, தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 11ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அந்த பெண்ணை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ள பொலிஸார், சிசுவுக்குத் தேவையான தாய்ப்பாலை பருக வேண்டுமென நீதவான் கட்டளையிட்டார். தாயின் கொடுமை எனும் குற்றச்சாட்டின் கீழ் அந்தப் பெண்ணுக்கு எதிராக […]

இலங்கை

நீர் கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

  • May 7, 2023
  • 0 Comments

கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நீர் விநியோகத் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும்இ 90 நாட்களுக்குப் பின்னர் அரச நிறுவனங்களுக்கும் தாமதக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார். இலங்கையில் மொத்த நீர் நுகர்வோர் எண்ணிக்கை 29 இலட்சம் ஆகும். அந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மாதாந்திர கட்டணத்தில் 50மூ […]

ஐரோப்பா

முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலா அணிந்திருந்த உடையில் ரகசிய பெயர்கள்

  • May 7, 2023
  • 0 Comments

முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலா அணிந்திருந்த வெள்ளை உடையில் சில ரகசிய பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததை தற்போது வெளியிட்டுள்ளனர். குறித்த உடையில், இன்னொரு முக்கிய நபராக ராணியார் கமிலாவின் வளர்ப்பு நாய்க்கும் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 75 வயதான ராணியார் கமிலா தமது வாழ்க்கையின் மிக முக்கிய தருணத்தில் அணிந்திருந்த வெள்ளை உடையின் சிறப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த உடையில் தமக்கு மிக நெருக்கமான நபர்கள் சிலரின் பெயர்களை பொறித்திருந்ததாக தெரியவந்துள்ளது. அதாவது தமது பிள்ளைகள் மற்றும் […]

Skip to content