செய்தி

ஆண்ட்ராய்டு, கூகுள் குரோமில் புதிய அப்டேட்

  • May 17, 2025
  • 0 Comments

உலகளாவிய அணுகல்தன்மை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் குரோமுக்காக பல புதிய ஏ.ஐ மற்றும் அணுகல்தன்மை அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, கூகுள் ஜெமினியின் திறன்களை டாக்பேக்கிற்கு கொண்டு வந்தது. டாக்பேக் என்பது குறைவான அல்லது பார்வையில்லாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டின் உள்ளமைக்கப்பட்ட ஸ்க்ரீன் ரீடர் கருவியாகும். தற்போது, ஜெமினி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதாகவும், பயனர்கள் படங்களைப் பற்றி கேள்விகள் கேட்கவும் பதில்களைப் பெறவும் முடியும் என்றும் டெக் ஜெயிண்ட் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. உதாரணமாக, […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

துருக்கி, அஸர்பைஜானுடனான வர்த்தகத்தை முழுமையாகப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவிப்பு

  • May 17, 2025
  • 0 Comments

துருக்கி, அஸர்பைஜானுடனான வர்த்தகத்தை முழுமையாகப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. துருக்கி மற்றும் அஸர்பைஜான் நாடுகளுடன் எந்தவிதமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது. இந்த இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்ததால் இந்த நாடுகளுடன் வர்த்தகத்தை முழுமையாக புறக்கணிப்பதாகவும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. மேலும் ஆசியாவின் மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி மொத்த சந்தையான டெல்லி ஆசாத்பூர் மண்டி துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி […]

உலகம்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் அகால மரணம் ஏற்படும் அபாயம்

  • May 17, 2025
  • 0 Comments

அதிக அளவு கேக், குக்கீ மற்றும், முன் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் அகால மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. 8 நாடுகளை ஈடுபடுத்திய நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, கொலம்பியா, சிலி, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேசிலில் உள்ள ஆஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளையின் (FIOCRUZ) மருத்துவர் எட்வர்டோ நில்சன் தலைமையிலான குழுவால் இந்தத் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதாக […]

விளையாட்டு

இன்று நடைபெறும் பெங்களூர் கொல்கத்தா போட்டி

  • May 17, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். காத்திருந்த அவர்களுக்கு இன்ப செய்தியை கொடுக்கும் வகையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மே 17-ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணியும் – பெங்களூர் அணியும் […]

செய்தி

இலங்கை வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • May 17, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது […]

ஆசியா

இந்தியாவுடன் மற்றொரு எல்லை பிரச்சினையை ஆரம்பிக்கும் முயற்சியில் சீனா

  • May 17, 2025
  • 0 Comments

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றும் சீனாவின் நடவடிக்கையை இந்தியா நிராகரிப்பதாகக் கூறுகிறது. இமயமலை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா கூறுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை சீனா மாற்றியது, மேலும் இந்த பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடப் பெயர்கள், முற்றிலும் […]

உலகம்

பொருளாதார நெருக்கடியால் திணறும் கியூபா – தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு

  • May 17, 2025
  • 0 Comments

கியூபாவில் தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்ப்படுத்துவதால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் தடுமாறி வரும் கியூபா நாட்டில் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் ஹவானாவில் தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு ஊர்களிலும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முடக்கம், வர்த்தகம் பாதிப்பால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்க கூடுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்தவரால் காத்திருந்த அதிர்ச்சி

  • May 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரியைத் தாக்கி தப்பியோடிய கைதி குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிட்னி விமான நிலையத்திலிருந்து நாடுகடத்தலுக்காக கொண்டு செல்லப்பட்ட 28 வயது டோங்கா நாட்டவர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் அவர் மீது வன்முறை குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை, ஆனால் விசா காலாவதியானதைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்டார். சந்தேக நபர் சிட்னியின் மேற்கில் 54 வயதுடைய ஒருவரின் கழுத்து மற்றும் கன்னத்தில் கத்தியால் குத்தியதாகவும், 36 வயதுடைய ஒருவரைத் தாக்கியதாகவும் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 7 ஆண்டாக யுவதியை கூண்டில் அடைத்துத் துன்புறுத்திய தம்பதி

  • May 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில் யுவதியை கூண்டில் அடைத்துத் துன்புறுத்திய தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். தற்போது 18 வயதான யுவதியை 7 ஆண்டாக அவ்வாறு துன்புறுத்தியதாக தம்பதி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அரசாங்க வழக்கிறஞர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அந்தப் பெண் தம்பதியிடமிருந்து தப்பினார். 38 வயது பிரண்டா ஸ்பென்சரும் 41 வயது பிராண்டன் மோஸ்லியும் 2018ஆம் ஆண்டு முதல் தம்மைத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் கூறினார். அந்தப் பெண்ணின் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவர் வீட்டில் அடைக்கப்பட்டதாக […]

செய்தி விளையாட்டு

லா லிகா பட்டம் வென்ற பார்சிலோனா

  • May 16, 2025
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி லா லிகா டைட்டிலை வெல்லும். 2024-25 சீசனின் 36ஆவது போட்டியில் பார்சிலோனா எஸ்பான்யோல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பார்சிலோனா 2-0 என வெற்றி […]

Skip to content