பொழுதுபோக்கு

விடாமுயற்சி படம் தமிழகத்தில் நடத்தியுள்ள வசூல் வேட்டை மக்கள் மத்தியில் ஆர்வம்

  • February 7, 2025
  • 0 Comments

மகிழ்திருமேனி அஜித்துடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து எடுத்த படம் விடாமுயற்சி. ஆக்ஷன்,த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. துணிவு படத்திற்கு பிறகு சுமார் 2 ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி வெளியாகி இருக்கிறது. இப்படம் 1997ல் வெளியான ஹாலிவுட் படமான விரேக்டவுன் படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியா, நார்த் அமெரிக்கா என வெளிநாடுகளில் பல படங்களில் ப்ரீ புக்கிங்கில் விடாமுயற்சி மாஸ் காட்டியுள்ள தகவல்கள் நிறைய வந்தன. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த பிப்ரவரி […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கைவிடப்பட்ட நாய்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

  • February 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நாய்களை தத்தெடுப்பதை ஊக்குவிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட நாய்களை தத்தெடுத்து வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. நாய்க்குட்டி கிண்ணம் 21 என்று பெயரிட்டு இருபத்து ஓராவது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் 40 மாகாணங்களில் இருந்து மீட்கப்பட்ட பல்வேறு இனத்தை சேர்ந்த 142 நாய்கள் கலந்து கொண்டன. பார்வை குறைபாடு, உடல் ஊனம் போன்ற சிறப்பு தேவையுள்ள 11 நாய்களும் போட்டியில் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் முற்றாக மூடப்படும் ரயில் பாதை : மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

  • February 7, 2025
  • 0 Comments

புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக, குருநாகல் – புத்தளம் பாதையின் அந்தப் பகுதி இன்று (7) முழுமையாக மூடப்பட வேண்டியிருக்கும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தப் புதுப்பித்தல் பணிகள் காரணமாக இந்தப் பகுதி நேற்றும் மூடப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரயில்வே சேவை மேலும் கூறுகையில், இந்த பாதை நாளை (8) மற்றும் நாளை மறுநாள் (9) மற்றும் பழுதுபார்க்கும் பணிகளின் […]

இலங்கை

இலங்கையில் இன்று முதல் டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்

  • February 7, 2025
  • 0 Comments

இலங்கையில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘GOVPAY’ திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும், அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாழ்வியல்

ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?

  • February 7, 2025
  • 0 Comments

உணவில் அதிக உப்பை சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கலாம் என்பதால், உலக சுகாதார அமைப்பு (WHO) அதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. WHO குறிப்பிட்டது போல, ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 கிராம் மட்டுமே உப்பு உணவில் சேர்க்க வேண்டும். ஆனால் இந்தியர்கள் பொதுவாக தினசரி 10 கிராம் வரை உப்பு எடுத்துக் கொள்கிறார்கள், இது பல ஆரோக்கிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எந்த உப்பு சாப்பிட வேண்டும்? WHO வழிகாட்டுதலின்படி, பொதுவாக பயன்படுத்தப்படும் டேபிள் சால்ட்க்கு பதிலாக, […]

உலகம்

முக்கிய வட்டி விகிதத்தை 3.75% ஆக குறைத்த செக் குடியரசு : ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • February 7, 2025
  • 0 Comments

செக் குடியரசின் மத்திய வங்கி நேற்றைய தினம் (06.02) அதன் முக்கிய வட்டி விகிதங்களை மீண்டும் குறைத்துள்ளது. டிசம்பர் மாதம் அதன் முந்தைய கொள்கைக் கூட்டத்தில் விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்த பிறகு பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. ஆய்வாளர்களால் கணிக்கப்பட்ட இந்த குறைப்பு, வட்டி விகிதத்தை கால் சதவீதப் புள்ளியால் குறைத்து 3.75% ஆகக் கொண்டு வந்தது. பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக டிசம்பர் 21, 2023 அன்று வங்கி கடன் செலவுகளை கால் புள்ளியால் குறைக்கத் தொடங்கியது. […]

உலகம்

வரலாற்றில் மிக வெப்பமான மாதத்தை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை அமைப்பு

  • February 7, 2025
  • 0 Comments

உலக அளவில் சென்ற கடந்த தான் வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை அமைப்பு அறிவித்துள்ளது. குளிர்ச்சியான La Nina பருவநிலைச் சுழற்சி நிகழும் நிலையிலும் போன மாதம் கடுஞ்சூடு நிலவியதாகத் தரவுகள் காட்டுகின்றன. பருவநிலை மாற்றம் துரிதமடைந்துவருகிறது எனும் அச்சத்தை அது ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தொழிற்புரட்சிக் காலத்துக்கு முன்பிருந்ததைவிடக் கடந்த மாதத்தில் வெப்பம் ஒன்றே முக்கால் செல்சியஸ் கூடுதலாக இருந்தது. சென்ற 19 […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

மூன்றாக மடிக்க கூடிய Samsung Galaxy G Fold – கசிந்த தகவல்

  • February 7, 2025
  • 0 Comments

சாம்சங் நிறுவனத்தின் முதல் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனுக்கு கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று பெயர் வைக்க இருப்பதாக தென் கொரியாவின் நேவர் பிளாட்ஃபார்மில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங், அதன் முதல் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு, அதன் அடுத்த தலைமுறை ஃபோல்டபிள் சீரிஸுடன் வெளியிடும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் ​, சமீபத்திய வதந்தி ஒன்று, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கு சாம்சங் கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று பெயரிடக்கூடும் என்று தெரிவித்துள்ளது. […]

இலங்கை

இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பில் முடிவை அறிவிக்க அரசாங்கத்திற்கு கால அவகாசம்!

  • February 7, 2025
  • 0 Comments

தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரவிடு சச்சிந்தா தெரிவித்தார். அந்த இரண்டு வார காலத்திற்குள் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை ரத்து செய்ய அரசாங்கத்திற்கும் நேரம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார். பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழுவிற்கும் இடையில் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து […]

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள்

  • February 7, 2025
  • 0 Comments

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் திகதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இருவருக்கும் காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். முன்னதாக ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். […]