“பிச்சைக்காரன் 2” மூன்று நாட்கள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
விஜய் ஆண்டனி நடித்து இயக்கிய பிச்சைக்காரன் 2 படத்தின் மூன்று நாள்கள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்தார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாக்க முக்க’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. அந்தப் பாடலின் ஹிட்டுக்கு பிறகு முன்னணி இசையமைப்பாளராக மாறிய […]