இந்தியா விளையாட்டு

மீண்டும் மழை காரணமாக இறுதிப்போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தம்

  • May 29, 2023
  • 0 Comments

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 – 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 29 வயது இளைஞன் பலி

  • May 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்தநிலையில் பின்னால் வேகமாக வந்த லொறியின் சக்கரம் அவரது தலைக்கு மேல் ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் என்கிற 29 வயதானவரே இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் […]

ஆசியா செய்தி

சவூதி அரேபியாவில் இரண்டு பஹ்ரைனியர்களுக்கு மரண தண்டனை

  • May 29, 2023
  • 0 Comments

“பயங்கரவாத” நடவடிக்கைகளுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பஹ்ரைனியர்களை சவூதி அரேபியா கொலை செய்துள்ளது என்று சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இதேபோன்ற மரணதண்டனைகளின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்ந்துள்ளது. ஜாபர் சுல்தான் மற்றும் சாதிக் தாமர் என அடையாளம் காணப்பட்ட பஹ்ரைன் பிரஜைகள், “பஹ்ரைனில் தேடப்படும் ஒரு நபர் தலைமையிலான பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக” குற்றம் சாட்டப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பஹ்ரைன் அதிகாரிகளிடமிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இல்லை. மே […]

இலங்கை செய்தி

யாழ் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழி – இரு பெண்கள் உட்பட மூவர் கைது

  • May 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடத்தி மூவரைக் கைது செய்துள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய […]

செய்தி

எதிர்பாராத ஒன்று 40 வயதில் நடந்துள்ளது! உருகினார் தனுஷ்

  • May 29, 2023
  • 0 Comments

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் தனுஷுக்கு 40வயதில் யூத் ஐகான் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. யூத் ஐகான் விருதை பெற்றுக்கொண்ட தனுஷ், இது தான் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு என்று உருக்கமாக பேசியுள்ளார். துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், […]

ஆசியா

சீனாவில் 26வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிர்பிழைத்த நான்கு வயது குழந்தை

  • May 29, 2023
  • 0 Comments

சீனா,ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தை,தனது வீட்டில் இருந்து கீழே குதித்து கை மற்றும் பல எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்துள்ளார். சீன ஊடகத்தின் படி, சிறுவன் தான் பார்த்த கார்ட்டூனில் இருந்து ஒரு காட்சியைப் பின்பற்ற முயன்றுள்ளார். சம்பவம் நடந்த அந்த நேரத்தில் அவரது பெற்றோர் வீட்டில் இல்லை, சிறுவன் எடை குறைவாக இருந்ததால், குடையால் அவனது வீழ்ச்சி மெதுவாகத் தெரிந்தது, மேலும் அவன் விழுந்தபோது சில மரங்களால் காப்பாற்றப்பட்டான். அவர் தற்போது உள்ளூர் […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகைக்கு திடீரென ஏற்பட்ட பரிதாப நிலை! கவலையில் ரசிகர்கள்

  • May 29, 2023
  • 0 Comments

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை நவ்யா நாயர், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நவ்யா நாயர், 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘இஷ்டம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து, மலையாள திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார். மலையாளத்தை தொடர்ந்து, தமிழிலும் ஒரு சில படங்களில் நவ்யா நாயர் நடித்துள்ளார். 2004 ஆம் […]

இந்தியா விளையாட்டு

இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு 215 ஓட்டங்கள் இலக்கு

  • May 29, 2023
  • 0 Comments

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன்பின் தொடர்ந்து அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி […]

பொழுதுபோக்கு

கேரளாவே கதி எனக் கிடக்கும் விஷால் : இதுதான் காரணமா?

  • May 29, 2023
  • 0 Comments

சமீபகாலமாக விஷால் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது ஷூட்டிங்க்கு சரியான நேரத்தில் விஷால் கலந்து கொள்வதில்லையாம். அதேநேரம் அவர் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்களும் தோல்வியை தழுவின. இது ஒருபுறம் இருக்க நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் இந்தக் கட்டிடம் கட்டி முடித்துவிட்டு தான் தாலி கட்டுவேன் என வீர வசனம் எல்லாம் பேசி இருந்தார். ஆனால் அவருக்கு இப்போது 45 வயது ஆகிறது. இருப்பினும் திருமணம் நிச்சயம் வரை […]

ஐரோப்பா

இத்தாலியின் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரை கத்தியால் தாக்கிய சிறுவன்!

  • May 29, 2023
  • 0 Comments

இத்தாலியின் மிலன் நகரின் புறநகரில் உள்ள உயர் நிலை பள்ளியில், ஆசிரியை ஒருவரை மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், 21 வயது ஆசிரியை படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். அபியடெக்ராஸ்ஸோ நகரில் வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 16 வயது சிறுவன் திடீரென எழுந்து நின்று ஆசிரியையின் கை மற்றும் தலையில் தாக்கியதாக வகுப்பில் கல்விக்கற்ற மாணவர்கள் தெரி1வித்துள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்திய மாணவர் மனநலப் பிரிவுக்கு […]

Skip to content