ஆப்பிரிக்கா

கொலம்பியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு கால்பந்து வீரர்கள் பலி!

  • February 11, 2025
  • 0 Comments

கொலம்பியாவில் நான்கு கால்பந்து வீரர்கள் மின்னல் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இடியுடன் கூடிய மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது ஜெய்டி மோரலெஸ், டேனிலா மொஸ்குவேரா, லஸ் லேம் மற்றும் எடெல்வினா மொஸ்குவேரா ஆகியோர் மைதானத்தின் ஓரத்தில் இருந்த கொட்டகையில் ஒளிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. கொலம்பியாவின் காஜிபியோவில் ஒரு மரத்தில் மின்னல் தாக்கியது, நான்கு பெண்கள் இறந்தனர். அவர்களுடன் இருந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பெண்கள் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. […]

வட அமெரிக்கா

அடுத்தக்கட்ட பிணைக்கைதி பரிமாற்றம் ஒத்திவைப்பு : ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

  • February 11, 2025
  • 0 Comments

காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் (15) விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு நிகழவில்லை எனில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிணைக்கைதிகள் அனைவரும் அந்தக் காலக்கெடுவுக்குள் விடுவிக்கப்படாவிட்டால் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை தாம் ரத்து செய்யவேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். அடுத்தக்கட்ட பிணைக்கைதி பரிமாற்றத்தை ஒத்திவைக்கப்போவதாக ஹமாஸ் போராளிக்குழு மிரட்டியதைத் தொடர்ந்து, டிரம்ப் அந்த விவகாரத்தில் தலையிட்டு உள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை : புதிய வாகனங்களின் விலை பட்டியலை வெளியிட்டது டொயோட்டா லங்கா நிறுவனம்!

  • February 11, 2025
  • 0 Comments

வாகன இறக்குமதி மீதான தடை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, டொயோட்டா லங்கா நிறுவனம் தனது பல்வேறு வகையான புத்தம் புதிய வாகனங்களுக்கான புதிய விலைகளை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலைகள் மாற்று விகிதம், வரிகள், அரசாங்க வரிகள் மற்றும் வரிகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டொயோட்டா லைட் ஏஸ், வட் வரி உட்பட  7.45 மில்லியன் என்ற மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படும். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300, வட் வரி  உட்பட […]

இந்தியா

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி : ட்ரம்பை சந்திக்கவுள்ளதாக தகவல்!

  • February 11, 2025
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் புதன்கிழமை அமெரிக்கா செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் இரண்டு நாட்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ரீதியாக முக்கியமான பல முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இலங்கை

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • February 11, 2025
  • 0 Comments

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு இது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளது. இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று செயலாளர் தெரிவித்தார். அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான கடன் […]

ஆசியா செய்தி

தென்கொரியாவின் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியரின் விபரீத முயற்சி

  • February 11, 2025
  • 0 Comments

தென்கொரியாவின் Daejeon நகரில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். நேற்று அங்குள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன. மாணவி கழுத்திலும் முகத்திலும் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாகத் தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது. பின் மருத்துவமனையில் அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றும் சுமார் 40 வயது நிரம்பிய மாதும் கத்திக்குத்துக் காயங்களுடன் சம்பவ இடத்தில் காணப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் குற்றத்தை […]

உலகம் செய்தி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்

  • February 11, 2025
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.44 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.87 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.44 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மின் தடைக்கான காரணத்தை வெளியிட்ட சஜித் பிரேமதாச!

  • February 11, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கைக் குறை கூறிய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள்மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையான பிரச்சினை என்ன என்பதை இனங்காண அவர்கள் சிந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனது x கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார். சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவையுள்ள காலங்களை நிர்வகிக்கத் தவறிய மோசமான நிர்வாகமும்தான் மின்தடைக்கான உண்மையான காரணம் என […]

செய்தி

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

  • February 11, 2025
  • 0 Comments

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யலாம்? 1) மருத்துவப் பரிசோதனை அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்வதால் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு ஆகியவற்றைச் சரிபார்க்கலாம். அதன் அடிப்படையில் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கணிக்கலாம் என்று கூறுகிறது New York Times இணையத்தளம். 2) சிகரெட் பழக்கத்தைக் கைவிடுதல் சிகரெட் புகைப்பதால் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் உறையலாம். அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

  • February 11, 2025
  • 0 Comments

நாளை மறுதினம் நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி அனல் மின் நிலையத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அப்போது தேசிய அமைப்பில் மின்சார விநியோகத்தை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை மின்சார சபை கூறியது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்வெட்டு ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு 4மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 1 மணி நேரம் 30 நிமிடங்கள் […]