Skip to content
இந்தியா இலங்கை

விமானத்தில் இருந்து தவறி விழுந்து நபருக்கு நேர்ந்த கதி!

  • June 3, 2023
  • 0 Comments

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ் விபத்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜோ ர்ஜ் (65) என்ற பயணியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி : 11 ரயில் சேவைகள் இரத்து!

  • June 3, 2023
  • 0 Comments

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து காரணமாக சென்னை –  கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண். 12666). இன்று காலை சென்னை சென்ட்ரல் வரவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (எண். 12842), பெங்களூருவில் இருந்து இன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக கவுகாத்தி செல்லும் ரயில்,  ஹவுராவில் இருந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இரண்டு வாரத்தில் மட்டும் 27 இளம் வயதுப் பிள்ளைகள் மாயம்..!

  • June 3, 2023
  • 0 Comments

அமெரிக்க நகரமொன்றில், இரண்டு வாரங்களில் 27 பிள்ளைகள் வரை மாயமாகியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அமெரிக்க மாகாணமான Ohioவிலுள்ள Cleveland நகரில், மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும், 12 வயது முதல் 17 வயதுவரையுள்ள சுமார் 30 பிள்ளைகள் வரை காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். பிள்ளைகள் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. ஒருவேளை, இது கடத்தல் கும்பல் ஒன்றின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காணாமல் போன பிள்ளைகள், […]

இந்தியா பொழுதுபோக்கு

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று : ரயில் விபத்து குறித்து கமல்ஹாசன் டுவிட்!

  • June 3, 2023
  • 0 Comments

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே விபத்துக்குள்ளான ரயிலில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்ற நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,  ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும்,  ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும்,  அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள […]

இலங்கை

தையிட்டியில் விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம்!

  • June 3, 2023
  • 0 Comments

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தப்படும் குறித்த போராட்டம் இன்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  செல்வராசா கஜேந்திரன்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,  ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து […]

ஐரோப்பா

கழிவறைக்குச் செல்வதாகக் கூறிசென்ற இளம்பெண் மாயம்!

  • June 3, 2023
  • 0 Comments

பிரான்சில் இளம்பெண் ஒருவரது கார் பிரேக் டவுன் ஆன நிலையில், போக்குவரத்துப் பொலிஸார் ஒருவர் அவரது உதவிக்கு வந்துள்ளார். ஆனால், அவரது கண்கணிப்பிலேயே அந்தப் பெண் மாயமாகியுள்ளார். Mélanie (35) என்னும் இளம்பெண், செவ்வாயன்று பிரான்சிலுள்ள Dordogne என்ற இடத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மதியம் ஒரு மணியளவில் அவரது காரில் பழுது ஏற்பட்டுள்ளது.உடனே, போக்குவரத்து பொலிஸார் ஒருவர் அவரது உதவிக்கு வந்துள்ளார். தான் கழிவறைக்குச் செல்லவேண்டும் என Mélanie கூற, அந்த பொலிஸார் அவரை தனது வாகனத்தில் […]

இலங்கை

வடக்கில் பௌத்த மயமாக்கல் – இந்தியா உதவாது என மனோ கணேசன் தெரிவிப்பு!

  • June 3, 2023
  • 0 Comments

தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கூறுவதால் எவ்வித பயனும் இல்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது நாட்டில் தோன்றிய பௌத்தத்தை மற்ற இடங்களிலும் வளர வேண்டும் என்றே இந்தியா விரும்பும் என்பதனால் இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகமே என்றும் குறிப்பிட்டுள்ளார். பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கோருவதற்கு பதிலாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு […]

இலங்கை

மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் – ஜனாதிபதி!

  • June 3, 2023
  • 0 Comments

தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் இழந்துள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகையால்  பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டாலும் 50 சதவீதம்  அதிகமான வாக்குபலத்தை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே  நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என நுவரெலியாவில் நடைபெற்ற 2023- 2024 தேசிய சட்ட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பா

பெல்கொரோட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 3, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பெல்கொரோட் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. அண்மைய நாட்களில் பெல்கொரோட் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்கள் நேற்று அருகிலுள்ள ஷெபெகினோவிலிருந்து 2,500 பேரை வெளியேற்றுவதாகக் கூறினர். ரஷ்யாவின் சுதந்திர லெஜியன் இந்த வாரம் பிராந்தியத்தின் வழியாக ரஷ்யாவுக்குள் தனது இரண்டாவது ஊடுருவலைத் தொடங்கியது. மாவட்டத்தில் அனைத்து சாலை மற்றும் ரயில் பயணங்கள் ஜூன் 30 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  கிளாட்கோவ் கூறினார்.

இந்தியா செய்தி

( update) ஒடிஸா மாநில ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 280 ஐக் கடந்தது!

  • June 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 850க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில்,  35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில்  விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை,  ஓமந்தூரார் மருத்துவமனை,  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 […]