இலங்கையில் டோக் குரங்கு கருத்தடை திட்டம் தோல்வி: வெளியான தகவல்
நாட்டின் பல பகுதிகளில் டோக் குரங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட டோக் குரங்கு கருத்தடை திட்டம் தோல்வியடைந்தது. மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கமவில் ஆரம்பிக்கப்பட்ட முன்னோடித் திட்டம் தற்போது முடங்கியுள்ளது. இன்றைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாத்தளை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அஜித மணிக்கும தெரிவித்ததாவது, பல சவால்கள் காரணமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன தலைமையில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. மலட்டு நீக்கம் செய்வதற்கு கால்நடை […]