செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பாரிய காட்டுத்தீ – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

  • June 8, 2023
  • 0 Comments

கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வட அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான காட்டுத் தீயினால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் புகையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத் தீயினால் ஏற்படும் புகை மிகவும் ஆபத்தானது என்பதால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலேயே இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா முழுவதும் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 20,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கா மீண்டும் முகமூடி அணிவது கட்டாயமாக்கியுள்ளது

  • June 8, 2023
  • 0 Comments

வட அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் முகமூடி அணியுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கனடாவில் பரவி வரும் காட்டுத்தீயால் அமெரிக்காவின் பல பகுதிகளில் அடர்ந்த புகை பரவி வருவதே இதற்கு காரணம். தற்போதைய நிலவரப்படி, வட அமெரிக்க குடியிருப்பாளர்கள் N95 முகமூடிகளை அணியுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புகைமூட்டம் காரணமாக, அமெரிக்காவின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. நியூயார்க் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த […]

முக்கிய செய்திகள்

சீனாவிற்கு காத்திருக்கும் ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

  • June 8, 2023
  • 0 Comments

சீனாவில் பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆறுமாதத்திலும் கொரோனா தாக்கும் என இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. நோய்த்தொற்றின் அலைகள் புதிய மாறுபாடுகள் தோன்றுவதற்கான அபாயத்தைக் கொண்டுள்ளன” என்று சியாட்டிலில் உள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் அலி மொக்தாட் கூறியுள்ளார். சீனாவில் ஜூன் மாத இறுதிக்குள், வாரத்திற்கு 6 கோடியே 50 லட்சம்பேர் பாதிக்கப்படுவார்கள் […]

கருத்து & பகுப்பாய்வு

உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியல் வெளியானது!

  • June 8, 2023
  • 0 Comments

உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் முதலிடத்தை பிடித்துள்ளது. நகரமாக நியூயோர்க் நகரம் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக காரணமாகியுள்ளது. நியூயோர்க் எப்பொழுதும் ஒரு வேலை மையமாகவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக பணிபுரியும் ஒரு கனவு நகரமாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் பகுதிகளில், நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அந்த பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதும் ஒரு காரணமாகும். ஏற்கனவே உள்ள பல […]

இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

  • June 8, 2023
  • 0 Comments

ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று நீரில் மூழ்கியதையடுத்து, காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், 29 வயதான குறித்த ரஷ்ய பிரஜை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஹிக்கடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தால் உலகிற்கு காத்திருக்கும் பேரழிவு!

  • June 8, 2023
  • 0 Comments

Ai தொழில்நுட்பத்தால் உலகம் எப்படி மாறப்போகிறது என புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதனால் எத்தகைய பிரச்சினைகள் வரப்போகிறது என பல எச்சரிக்கைகள் இதுவரை வெளிவந்துள்ளது. ஆனால் இதனால் நாம் நினைத்துப் பார்க்காத வகையில் மிகப்பெரிய சம்பவம் நடக்கப்போகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட்டது Ai துறையில் இயங்கி வரும் ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் CEO-க்கள் என்பதால், இதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுகொள்ளாமல் கடந்துவிட முடியாது. இந்த அறிக்கையை OpenAi நிறுவனர் சாம் ஆல்ட்மேன், […]

அறிந்திருக்க வேண்டியவை

உலக பெருங்கடல் தினம் இன்று! அறிந்திருக்க வேண்டியவை

  • June 8, 2023
  • 0 Comments

சர்வதேச பெருங்கடல் தினமான இன்று கடல் வளத்தை காப்போம். கடல் பாதுகாப்பை உறுதிசெய்வோம்.கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம். பரந்து விரிந்த இந்த புவி பரப்பில் மனிதர்கள் மட்டும் இன்றி ஏராளமாக உயிரினங்கள், புல், பூண்டுகள், கடல்வாழ் உயிரிகள் வாழுகின்றனர். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இந்த புவியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதை உறுதிப்படத்தினால்தான் இங்கு மனித சமூகத்தின் இருப்பை தக்க வைக்க இயலும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல் பூமியின் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு விசேட தகவல்

  • June 8, 2023
  • 0 Comments

இலங்கை கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செயல்முறையானது கடவுசீட்டு விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும், 3 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களின் குடியிருப்புகளுக்கு அவற்றை விநியோகிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. […]

ஆசியா

சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டவருக்கு நேர்ந்த கதி

  • June 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சோவா சூ காங்கில் சிறுமியிடமே குறித்த நபர் தவறாக நடந்துக் கொண்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 5) காலை 9 மணியளவில், பிளாக் 803 கீயட் ஹாங் க்ளோஸின் படாலிங் காபிஷாப்பில் (Badaling Coffeeshop) இந்த சம்பவம் நடந்ததாக ஸ்டாம்ப் வாசகர் கூறியுள்ளார். ஊழியர் துப்பரவு பணியாளராக வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் தயார் கூறியதாவது; அந்த வக்கிர புத்தி கொண்ட நபர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • June 8, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வீடொன்றின் குளியறைக்குள் இருந்து இரண்டு மீற்றர் நீளமான மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மலைப்பாம்பை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இச்சம்பவம் தெற்கு பிரான்ஸின் Millau (Aveyron) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.55 மணிக்கு காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெண் ஒருவர் தனியே வசித்து வரும் வீட்டின் குளியலறையில் இரண்டு மீற்றர் நீளமுடைய […]

Skip to content