இலங்கை

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் அத்துமீறி நுழைய முயன்றவரால் பதற்றம்!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது ஒருவர் தேவாலயத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இம்தியாஸ் என்ற நபர் கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்/ மாத்தளை அகலவத்தை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடத்தையும் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடத்தையும் கொண்ட 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தேவாலய ஆராதனைகளை கேட்பதற்காக தான் வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு […]

இலங்கை

வைத்தியசாலையில் இன்சுலின் மருந்திற்குத் தட்டுப்பாடு!

  • June 9, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவில் இன்சுலின் மருந்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சுலின் தட்டுப்பாட்டினால் மருத்துவர்கள் இன்சுலினை வெளியில் வாங்குமாறு தெரிவிப்பதால் நோயாளிகள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  தேசிய வைத்தியசாலைகளின் நீரிழிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர் இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளைஇ நாட்டில் தற்போது குரங்கம்மை தொற்றுக் குறித்த எவ்வித அச்சுறுத்தலுமில்லை என்பதால் வைரஸ் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதார அமைச்சின் […]

இலங்கை

பொலிஸ் காவலில் ஒருவர் உயிரிழப்பு! பல அதிகாரிகள் கைது

பொலிஸ் காவலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 7 அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவா்களில் உதவி பொலிஸ் பாிசோதகா் ஒருவரும், பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 5 பேரும் அடங்கியுள்ளனா். நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் […]

இலங்கை

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்கவும்; டயானா

  • June 9, 2023
  • 0 Comments

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார். “இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சமூக நோய் என்றால் என்னவென தெரியாது. இந்த நோய்களைப் பற்றி சில பிள்ளைகள் அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என்றார். “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிக […]

இந்தியா வட அமெரிக்கா

நாடு கடத்தப்படவுள்ள இந்திய மாணவர்கள் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

  • June 9, 2023
  • 0 Comments

போலியான கல்லூரி சேர்க்கை தொடர்பில் ஏமாற்றப்பட்ட 700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்படும் சூழலில் சுமூக தீர்வு உறுதி என அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஆனால் வழக்குகள் தீர்க்கப்படும் போது மாணவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுமா என்பது தொடர்பில் குடிவரவு அமைச்சர் Sean Fraser தெளிவு படுத்தவில்லை. கல்லூரி சேர்க்கை தொடர்பான போலியன கடிதம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஒரு தீர்வுக்காக தாங்கள் தீவிரமாக முயன்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச மாணவர்கள் விவகாரத்தில் […]

இலங்கை

இனப்படுகொலைகள் குறித்து கனடாவின் பிரகடனம், ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரிக்கை!

  • June 9, 2023
  • 0 Comments

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய பார்வை தொடர்பான கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,   கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பில் தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் […]

உலகம்

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் பலி

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் சட்டவிரோதமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 6 குழந்தைகள் உள்பட 47 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  

ஐரோப்பா

தந்தை கண் முன்னே ரஷ்ய இளைஞரை கொன்ற சுறா பிடிபட்டது

  • June 9, 2023
  • 0 Comments

சுற்றுலா சென்றிருந்த ரஷ்ய இளைஞர் ஒருவரை அவரது தந்தையின் கண் முன்னே கபளீகரம் செய்த சுறா மீனை அதிகாரிகள் பிடித்துள்ளார்கள். ரஷ்யாவிலிருந்தால் உக்ரைனுடன் போருக்குச் செல்ல நேரிடலாம் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ எகிப்துக்கு தன் தந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார் விளாடிமிர் (23) என்ற இளைஞர்.ஆனால், Hurghada என்னுமிடத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்த விளாடிமிர் கடலில் நீந்திக்கொண்டிருக்க, அவரது தந்தை கரையிலிருந்தவண்ணம் அவரைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரைத் தாக்கத் துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் […]

உலகம்

தீவிரமடையும் போர் பதற்றம்! அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்

உக்ரைன் ரஷ்யா போரில் ட்ரோன் தாக்குதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி கட்டிடம் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது. அ தில் சிலர் காயமடைந்தனர். பதிலுக்கு ரஷ்யாவும் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள வோரோனேஜ் நகரில் இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் மீது […]

ஐரோப்பா

ககோவ்கா அணை தகர்ப்பிற்கு ரஷ்யா தான் காரணமா? : ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன்!

  • June 9, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை அழிக்கப்பட்டமைக்கு ரஷ்யா தான் காரணம் என்பதை நிரூபிக்கும் வகையில், தொலைப்பேசி அழைப்பை இடைமறித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ககோவ்கா அணை தகர்ப்பு விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி  உக்ரைனின் பாதுகாப்பு சேவை அதன் டெலிகிராம் சேனலில் கூறப்படும் உரையாடலின் ஒன்றரை நிமிட ஆடியோ கிளிப்பை வெளியிட்டது. அதில், ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர், பேரழிவின் பின்னணியில் தங்கள் நாசவேலை குழு […]

Skip to content