நடுவானில் சுயநினைவை இழந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி !
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நியூயார்க்கிற்கு விமானம் மூலமாக பயணப்பட்ட சிறுவன் திடீரென்று சுயநினைவை இழந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் ஹங்கேரியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவர்களின் உதவியை நாடியிருந்த விமான ஊழியர்கள், 11 வயதேயான அந்த சிறுவனுக்கு முதலுதவியும் அளித்துள்ளனர். இந்த நிலையில் விமானம் ஹங்கேரியில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவர்கள் குழு ஒன்று விமானத்தினுள் சென்று சிறுவனை பரிசோதித்துள்ளனர். […]