ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழ்பவர்களுக்கு வெளியான தகவல்

  • June 21, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் ஜொப் சென்டர் உதவிகளை வழங்க இருக்கின்றது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் தங்களது வாழ்கை செலவுகளை ஈடு செய்கின்றவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகவே காணப்படுகின்றது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழ்ந்து கொண்டு கரியர்பொன் என்று சொல்லப்படுகின்ற விடுமுறையை களிக்கின்ற வீடுகளில் வசிக்கின்ற ஓர் குடும்பத்தினருக்கு ஜொப் சென்டர் ஆனது அதற்குரிய வாடகை பணத்தை வழங்க வேண்டும் என்று லண்டன் சோஸிஸியால் கிரிப் பிரைப்போர் தனது உத்தரவை தெரிவித்து இருக்கின்றது. அதாவது ஓர் குடும்பமானது சமூக […]

ஆசியா

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியரின் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்

  • June 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் குழந்தைகளை நோக்கி விளையாட்டுக்காக பட்டாசை வீசிய கட்டுமான துறையை சேர்ந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அதனை கண்ட ஊழியர் விளையாட்டுக்காக அவர்களை நோக்கி பட்டாசுகளை வீசினார். உடனே அந்த பட்டாசு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் குழந்தைகள் பயத்தில் தெறித்து ஓடியுள்ளது. இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 49 வயதான ராம்தான் புஜான் என்ற அந்த ஊழியருக்கு 3,500 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. […]

இலங்கை

இலங்கையில் இணைய வழி கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • June 21, 2023
  • 0 Comments

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வழி கடவுச்சீட்டு முறைமையின் கீழ் அதிகளவில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் முறைப்பாடுகள் இருப்பின் அறிவிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இணைய வழியில் விண்ணப்பம் கோரல் திட்டம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைமையின் ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்கள் தங்களது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற, 1962 என்ற விசேட இலக்கத்திற்கு தொடர்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியருக்கு அடித்த 55 மில்லியன் பவுண்ட் ஜாக்பாட் பரிசு

  • June 20, 2023
  • 0 Comments

செவ்வாயன்று நடந்த டிராவில் இங்கிலாந்து டிக்கெட் வைத்திருப்பவர் 55 மில்லியன் பவுண்டுகள் யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டை வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி எண்கள் 11, 17, 28, 32 மற்றும் 35 என்பதுடன் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 05 மற்றும் 06 ஆகும். சண்டே டைம்ஸ் ரிச் லிஸ்ட் படி, வெற்றியாளர் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஹாரி கேனை விட (£51m) செல்வந்தராக இருப்பார். இந்த மாத தொடக்கத்தில், மற்றொரு பிரித்தானியா டிக்கெட் வைத்திருப்பவர் EuroMillions டிராவில் 111.7 மில்லியன் பவுண்ட் […]

ஐரோப்பா செய்தி

விலங்குகள் நலன் கருதி திமிங்கல வேட்டையை ஐஸ்லாந்து நிறுத்தியுள்ளது

  • June 20, 2023
  • 0 Comments

விலங்கு நலக் கவலைகள் காரணமாக இந்த ஆண்டு திமிங்கல வேட்டையை ஆகஸ்ட் இறுதி வரை இடைநிறுத்துவதாக ஐஸ்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது. இது சர்ச்சைக்குரிய நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரக்கூடும். விலங்கு உரிமைக் குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த முடிவைப் பாராட்டினர், ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் இதை “இரக்கமுள்ள திமிங்கல பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்” என்று அழைத்தது. ஐஸ்லாந்தின் விலங்குகள் நலச் சட்டத்திற்கு இணங்கவில்லை என்று அரசாங்கம் நியமித்த அறிக்கையின் முடிவில் உணவு அமைச்சர் ஸ்வாண்டிஸ் […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் வைத்தியர்கள் வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

  • June 20, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவரின் வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர். காணி பிணக்கு காரணமாகாவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

ஆசியா செய்தி

2014க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் விளையாடவுள்ள பாகிஸ்தான் கால்பந்து அணி

  • June 20, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் தேசிய கால்பந்து அணிக்கு இந்தியாவுக்கான விசா வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அங்கு அவர்கள் 2014 முதல் இந்திய மண்ணில் தங்கள் முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்வார்கள். தெற்காசிய அண்டை நாடுகள் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) சாம்பியன்ஷிப் தொடர் நாளை தொடங்கும். 2008 மும்பை தாக்குதல் மற்றும் 2019 இல் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் மோசமான நீண்ட அரசியல் பதட்டங்கள் காரணமாக இரு நாடுகளும் எந்த […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் பாலுக்கு அழுத நாய் குட்டிகளை உயிரோடு எரித்த கொடூரம்

  • June 20, 2023
  • 0 Comments

பாலுக்கு அழுத நாய் குட்டிகளால் தன் தூக்கம் பறிபோகுது என 07 நாய்க்குட்டியை உயிருடன் எரித்து கொன்ற நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் சாவகச்சேரி காவல்துறையினருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். அது சில தினங்களுக்கு முன்னர் 07 குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த குட்டிகள் இரவு வேளைகளில் பாலுக்காக கத்தியுள்ளன. அதனால் இரவில் தன்னால் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் கிராப் நிறுவனம்

  • June 20, 2023
  • 0 Comments

சிங்கப்பூரைச் சேர்ந்த கிராப் ஹோல்டிங்ஸ், தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி ரைட்-ஹெய்லிங் மற்றும் உணவு விநியோக செயலி, 1,000 வேலைகளை அல்லது 11 சதவீத பணியாளர்களை குறைத்து வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், திரு ஆண்டனி டான், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய வெட்டுக்கள் “லாபத்திற்கான குறுக்குவழி” அல்ல, ஆனால் வணிக சூழலுக்கு ஏற்ப ஒரு மூலோபாய மறுசீரமைப்பு ஆகும். “மாற்றம் இவ்வளவு வேகமாக இருந்ததில்லை. ஜெனரேட்டிவ் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) […]

இலங்கை செய்தி

மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளருக்கு விளக்கமறியல் உத்தரவு

  • June 20, 2023
  • 0 Comments

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. கொம்பனி வீதி மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடு வழங்குவதாகக் கூறி 70 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கொம்பனி வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாக கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் […]