இலங்கை

Dupuy de Lôme’ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பிரெஞ்சு கடற்படைக் கப்பலான Dupuy de Lôme இன்று (ஜூன் 21, 2023) முறையான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். Dupuy de Lôme என்பது 102.40மீ நீளமுள்ள மின்காந்த ஆராய்ச்சிக் கப்பலாகும், இதில் 107 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். இந்த கப்பல் தளபதி அகஸ்டின் பிளான்செட் என்பவரால் வழிநடத்தப்படுகிறது. அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் போது, Dupuy de Lôme இன் […]

இந்தியா

நாட்டின் பிரதமர் பெயரை அறிந்திருக்காததால் மணமகனுடன் உறவை முறித்துக் கொண்ட மணமகள்!

  • June 21, 2023
  • 0 Comments

நாட்டின் பிரதமர் பெயரை கூட மணமகன் அறிந்திருக்காததால், அவருடனான திருமண உறவை மணமகள் முறித்துக் கொண்டார். இதற்கிடையே புது மாப்பிள்ளையின் தம்பியுடன் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் அடுத்த நசிர்பூர் கிராமத்தில் வசிக்கும் சிவசங்கர் ராம் என்பவருக்கும், கரண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்ப பழக்க வழக்கத்தின்படி திருமண ஊர்வலம் நடந்தது. மணமகனின் வீட்டிற்கு மணப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு […]

இந்தியா

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு – திருமாவளவன்!

  • June 21, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், விஜயின் செயற்பாடுகள் அமைந்திருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ,  மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கிய விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,  பொது வாழ்க்கைக்கு வரக் கூடியவர்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக […]

தமிழ்நாடு

தொலைபேசி மீதிருந்த மோகத்தால் மாணவி செய்த செயல் ; காப்பாற்றிய பொலிஸார்!

  • June 21, 2023
  • 0 Comments

தமிழகம், காரைக்குடியில் செல்போனுக்காக 2வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 17 வயது சிறுமியை பொலிஸார் கடும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன். இவரது 17 வயது மகள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லுாரிக்கு செல்ல இருந்தார்.மாணவி எந்நேரமும் மொபைலில் மூழ்கியிருப்பதைகண்ட தந்தை , கடுப்பாகி மொபைலை பறித்து வைத்த நிலையில் மகள் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து […]

பொழுதுபோக்கு

படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு ஏற்பட்ட காயம்! சோகத்தில் ரசிகர்கள்

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் ‘ஹீரோ’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் ‘புத்தம் புது காலை’ வெப் தொடர் மற்றும் சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கல்யாணி பிரியதர்ஷன், ‘ஆண்டனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஜோஷி இயக்குகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் […]

இலங்கை

வடக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – சாள்ஸ்!

  • June 21, 2023
  • 0 Comments

வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194 பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். அதாவது பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகரபுறங்களை நோக்கி செல்கின்றார்கள். இரண்டாவது காரணம் பிறப்பு விகிதம் குறைவு,  […]

மத்திய கிழக்கு

பழிவாங்கும் முயற்சியில் பாலஸ்தீனர் சுட்டதில் 4 யூதர்கள் பலி

  • June 21, 2023
  • 0 Comments

பாலஸ்தீன நகரமான ரமல்லாவுக்கு கிழக்கே யூதக் குடியிருப்பு அருகே பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 4 இஸ்ரவேலர்கள் கொல்லப்பட்டனர். அங்குள்ள பெட்ரோல் பங்க் வன்றுக்குள் புகுந்த அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார் இதில் யூதர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். உடனே அருகிலிருந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்தினர் இரு தினங்களுக்கு முன்பு மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 40க்கும் பேற்பட்டோர் காயமடைந்தனர். […]

வட அமெரிக்கா

தண்ணீரிலிருந்து முழுமையாக வெளியை வந்த 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம்!

  • June 21, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று திடீரென பூமியில் இருந்து வெளி வந்துள்ளது. தண்ணீரில் மூழ்கிய இந்த தேவாலயம் தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளது. உண்மையில் இதற்கான காரணம் இப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி தான் என கூறப்படுகிறது. இந்த தேவாலயம் சாண்டியாகோ கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக குறைந்த நீர்மட்டம் உள்ள காலங்களில் ஓரளவு தெரியும்.இருப்பினும், வழக்கத்தை விட மிக அதிக வெப்பநிலை நிலவுவதாலும், மழை இல்லாததாலும், அணை வறண்டு போய் இந்த […]

ஆசியா

தென்கிழக்கு ஆசியாவில் 1000 வேலைவாய்ப்புகளை குறைக்கும் உணவு விநியோக செயலி!

  • June 21, 2023
  • 0 Comments

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி ரைட்-ஹைலிங் மற்றும் உணவு விநியோக செயலியான கிராப், 1,000 வேலைகளை குறைப்பதாக கூறியுள்ளது. செலவுகளைக் குறைக்கவும், நீண்ட காலத்திற்கு மலிவு விலையில் சேவைகளை உறுதிப்படுத்தவும் இந்த ஆட்குறைப்பு  தேவை என்று நிறுவனத்தின் முதலாளி கூறினார். சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் எட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தங்கள் சேவைகளை வழங்கி வருகிறது. 2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட போட்டியாளரான Uber இன் செயல்பாடுகளை Grab எடுத்துக் கொண்டது. ஊழியர்களுக்கு […]

ஐரோப்பா

கனடாவில் காணாமல் போன தமிழர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

ஒன்ராறியோ – Vaughan நகரில் இருந்து காணாமல் போன 43 வயதுடைய திவாகர் பரம்சோதியை கண்டுபிடிப்பதில் பொது உதவியை நாடியுள்ளனர்.யோர்க் பிராந்திய பொலிஸ் #4 மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் புலனாய்வாளர்கள். கடந்த ஜூன் 19 ஆம் திகதியில் இருந்து இவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடைசியாக கடந்த 19ஆம் திகதி மாலை 6 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடைசியாக அவர் டொராண்டோவின் நகர்ப் […]