ரோஹித், விராட் ஓய்வு குறித்து கௌதம் கம்பீர் வெளியிட்ட தகவல்
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இவர்களின் ஓய்வு இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான […]