உள்ளூராட்சி தேர்தல் திகதியை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு சற்றுமுன்னர் தீர்மானித்துள்ளது..
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு சற்றுமுன்னர் தீர்மானித்துள்ளது..
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் சற்று முன்னர் இந்த தாக்குதலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனமும் (IUSF) இந்த எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 315 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 335 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து தங்கத்தின் விலையும் சற்று வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி 24 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாவாகவும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 21 கரட் பவுண் […]
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பான விவாதத்தை அடுத்த அமர்வில் நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டுள்ளார்
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீதி வரைபடம் என்பவற்றுடன் அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உறுதியளித்தார் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உரையின் போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி , நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்
மாணவன் ஒருவருக்கு மதிய உணவில் நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை 6 மாணவர்கள் சேர்ந்து கலந்து கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவனுக்கே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ் 6 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு செயலைச் செய்த ஆறு […]
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு எழுத்து மூலமான ஆதரவை சீனா வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, இந்த எழுத்துமூல ஆதரவு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு மிக நெருக்கமானதாகவும், அதன் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதியை பெறுவதற்கு சாதகமான சூழ்நிலை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த எழுத்துப்பூர்வ ஆதரவின் மூலம் உரிய உத்தரவாதத்தைப் பெறுவதில் இருந்த மிகப் பெரிய தடை ஒன்று நீக்கப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தேங்காய் பாலினால் 1500 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தேங்காய் பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக கேள்வி காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மாத்திரம் 40,000 மெற்றிக் டன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் சரத் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அதன் மூலம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தேங்காய் பாலுக்கு அதிக கேள்வி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. அச்செயலியில் பிரதான 7 மொழிகளில் அவசியமான அனைத்துத் தகவல்களும் உள்ளடக்கப்படும் அதேவேளை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகளின் விபரங்களும் சேர்க்கப்படவுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கையில் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் அச்செயலியில் உள்ளடக்கப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி […]
யாழ். நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தா நுழைய வேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.