முக்கிய செய்திகள்

உக்ரைனில் மீண்டும் பரபரப்பு – ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் நால்வர் பலி

  • June 28, 2023
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் கட்டுப்பாட்டிலுள்ள Kramatorsk நகர மையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாமென தெரிவிக்கப்படும் நிலையில், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு

கால்பந்து வீரர் நெய்மருக்கு முழு சொத்துக்களையும் எழுதி வைத்த ரசிகர்!

  • June 28, 2023
  • 0 Comments

பிரேசிலில் கால்பந்து வீரர் நெய்மருக்கு ரசிகர் ஒருவர் தமது முழு சொத்துக்களையும் கொடுக்கவுள்ளார். தனது மரணத்துக்குப் பின் சொத்தெல்லாம் நெய்மருக்குச் செல்லவேண்டும் என்று 30 வயது ரசிகர் ஒருவர் உயிலில் எழுதியுள்ளார். “எனக்கு நெய்மரைப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் ஒற்றுமைகள் பல உள்ளன. நானும் அவரும் குடும்பத்தைச் சார்ந்து இருப்பவர்கள். நெய்மாருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையிலான உறவு எனக்கும் என் காலஞ்சென்ற தந்தைக்கும் இருந்த உறவை நினைவுபடுத்துகிறது” என குறித்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். சொத்தை […]

அறிந்திருக்க வேண்டியவை

காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாதவை – அறிந்திருக்க வேண்டியவை

  • June 28, 2023
  • 0 Comments

ஒவ்வொரு நாளும் நாம் தூங்கி எழுந்த பிறகு ஒரு புதிய புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது. மேலும், எழுந்த உடன் இந்த நாள் எப்படி அமையும் என்பது குறித்து பலவித எதிர்பார்ப்புகள் ஏற்படும். அதன் காரணமாக நாம் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை செய்யக்கூடாது. அதிலும் குறிப்பாக காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்க்க கூடாது. ஏனென்றால் செல்போனில் அதிர்ச்சி தரும் செய்திகளை பார்த்தால் காலையிலேயே உடலுக்கும், மனதுக்கும் சோர்வை ஏற்படுத்தும். இந்த தாக்கம் அந்த நாள் முழுவதும் இருக்கும் என்பதால் […]

வட அமெரிக்கா

கனடா வாழ் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • June 28, 2023
  • 0 Comments

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கனடாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் துஷார ரொட்ரிகோ வலியுறுத்தியுள்ளார். கனடாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகம் கனேடிய பொருளாதாரம் மற்றும் கனடாவின் கலாசாரத்தில் பாரிய சக்தியாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், வலுவான தமிழ் வர்த்தக சமூகமும் இளம் தமிழ் தொழில் வல்லுநர்களும் இலங்கைத் தமிழர்களை கனேடிய […]

அறிவியல் & தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சி – இயந்திரக் கரங்களை உருவாக்கும் ஜப்பான்

  • June 28, 2023
  • 0 Comments

ஐப்பானிய விஞ்ஞானிகள தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சிக்கு தயாராகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் குவியும் வேலைகளை விரைந்து செய்துமுடிக்க இன்னொரு கை இருந்தால் நன்றாக என நினைத்து ஜப்பானிய விஞ்ஞானிகளின் புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். கூடுதல் இயந்திரக் கரங்கள் இருந்தால் பல வேலைகளை எளிதில் செய்துமுடிக்கலாம் என்பது இந்த குழுவினரின் நோக்கமாகும். Jizai என்ற ஜப்பானியக் கலையிலிருந்து உதித்தவை இந்தக் கரங்களாகும். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றின் வடிவத்தைத் தத்ரூபமாக உருவாக்குவதுதான் Jizai கலை. விரும்பியதைச் […]

இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் அடையாள திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

  • June 28, 2023
  • 0 Comments

இலங்கையில் தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார். தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற போதே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நபர்களின் சுய விபரங்கள், முகம், கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் என்பன மத்திய தரவுக்கட்டமைப்பில் உள்வாங்கப்படும் என […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களை தேடும் அரசாங்கம்

  • June 28, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றன. 3 வது நாட்டில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மனிய நாட்டிற்கு அழைப்பது தொடர்பான விடயங்கள் தற்பொழுது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக புதிய சட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகதிகளாக ஜெர்மனி நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கும் இந்த சட்டம் சில சலுகைகளை வழங்குகின்றது. ஜெர்மனியின் கூட்டு அரசாங்கமானது பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்குவதற்காக மந்திரி சபையில் புதிய சட்டத்திற்கு தனது இணக்கப்பாடை தெரிவித்துள்ளது. அதாவது […]

ஐரோப்பா

பிரான்ஸ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை!

  • June 28, 2023
  • 0 Comments

⁹பிரான்ஸில் 4.1 மில்லியன் பேர் நிதிபற்றாக்குறையுடன் வாழ்வதாக தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் படி இந்த விபரம் வெளியாகியுள்ளத. பிரான்ஸ் மத்திய வங்கி இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. மக்கள் சரியான நேரத்தில் கட்டணங்கள் செலுத்தவும், வாடகை செலுத்தவும், வங்கி காசோலைகளை சரியான நேரத்தில் செலுத்தவும் சிரமப்படுகின்றனர். இதுபோல் 4.1 மில்லியன் பேர் குறைந்த வருவாயினால் வங்கி நிர்வாகங்களை சமாளிக்க திணறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வங்கிகளில் பணத்தினை சேமிக்க முடியாமல் […]

ஆசியா

சிங்கப்பூரில் தீவிரமடையும் இணைய மோசடிச் சம்பவங்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • June 28, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில்இணைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் 8,500 சம்பவங்கள் சென்ற ஆண்டு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டன. 2021ஆம் ஆண்டில் கையாளப்பட்ட 3100 சம்பவங்களைவிட அது ஒரு மடங்கிற்கும் அதிகம் என தெரியவந்துள்ளது. சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு அதன் வருடாந்திர அறிக்கையில் அந்த விவரங்களை வெளியிட்டது. புகார் செய்யப்பட்ட போலி இணையப்பக்கங்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வங்கி, நிதிச் சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனங்களைப்போல் தோற்றம் […]

இலங்கை

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

  • June 28, 2023
  • 0 Comments

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் […]