செய்தி தமிழ்நாடு

சினிமாவில் இருந்து ஓய்வுபெறும் விஜய்?

  • July 3, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிறகு விஜய் சிறிது காலம் நடிப்பு மற்றும் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போவதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. விஜய்அரசியலில் இணையப் போவதாக இந்தியா டுடே என்ற இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது, […]

ஐரோப்பா செய்தி

விருது பெற்ற உக்ரைன் எழுத்தாளர் விக்டோரியா அமெலினா உயிரிழந்தார்

  • July 3, 2023
  • 0 Comments

விருது பெற்ற உக்ரைன் எழுத்தாளர் விக்டோரியா அமெலினா காலமானார். கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள பீட்சா உணவகம் மீது மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு37 வயது. கிராமடோர்ஸ்க் நகரம் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது. நகரின் பிரபலமான ரியா லவுஞ்ச் உணவகத்தில் கொலம்பிய ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குழுவுடன் உணவருந்தியபோது அவர் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த […]

ஐரோப்பா செய்தி

ஸ்வீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம்!! போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை

  • July 3, 2023
  • 0 Comments

ஸ்வீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபுக் குடியரசின் அல்-இத்திஹாத் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், போப் பிரான்சிஸ் இந்த கவலையை வெளிப்படுத்தியதுடன், மனித சகோதரத்துவம் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள விழுமியங்களை ஒவ்வொருவரும் தங்கள் இதயங்களில் சுமக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புனித குர்ஆனின் பிரதிகளை எரிக்கும் செயலால் தான் கோபமும் வெறுப்பும் அடைவதாகவும், எந்த புத்தகமும் அதன் நம்பிக்கையாளர்களுக்கு மதிக்கப்பட வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றவர்களின் […]

இலங்கை செய்தி

தங்கம் கடத்திய எம்.பி!!! அறிக்கை கையளிப்பு

  • July 3, 2023
  • 0 Comments

அண்மையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த குற்றச்சாட்டில் 70 இலட்சம் ரூபா தண்டப்பணத்தில் விடுவிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பான முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் இலங்கை சுங்கம் வழங்கியுள்ளது. இலங்கை சுங்கத்தினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சமர்ப்பித்து எம்.பி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் குஜராத்தி சொசைட்டியில் துப்பாக்கிச் சூடு: திருமண விருந்தில் திடீர் பரபரப்பு

  • July 3, 2023
  • 0 Comments

குஜராத்தி சொசைட்டி இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள வால்வர்ஹாம்ப்டனில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு திருமண விழா நடந்தது. 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தகவலின் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில், ஒரு கார் பின்னால் நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மீது பல […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நாசா விஞ்ஞானிகள்

  • July 3, 2023
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறை இனத்தை போன்றே இலங்கையில் உள்ள பாறை இனம் குறித்து நாசா கவனம் செலுத்தியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தனர். இந்நிலையில், மொனராகலை கினிகல்பலஸ்ஸ கிராமத்திற்கு அருகில் உள்ள பாம்பு எனப்படும் பாறை இனங்கள் குறித்து நாசா விஞ்ஞானிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாம்புப் பாறையை ஆய்வு செய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் குழு கடந்த வாரம் நாட்டிற்கு வந்தது. மொனராகலை செவனகல கினிகல்பலஸ்ஸ கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள பாம்புப் பாறை வகைகளை இந்த குழுவினர் […]

இலங்கை செய்தி

தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா பற்றிய புதிய தகவல்

  • July 3, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து தாய்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட “முத்துராஜா” யானைக்கு மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட “முத்துராஜா” யானை 22 வருடங்களின் பின்னர் கடந்த இரண்டாம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று மதியம் தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் விமான நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேர விமான பயணத்திற்கு பிறகு முத்துராஜா சென்றடைந்தது. இதையடுத்து அந்த யானை தாய்லாந்தின் லாம்பாங்கில் உள்ள யானைகள் தடுப்பு […]

செய்தி

ஓபிஎஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கேன்… நடிகையின் பரபரப்பு பேட்டி

  • July 3, 2023
  • 0 Comments

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரேகா நாயருக்கு, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இருப்பினும் அவருக்கு சைடு ரோல்களே கிடைத்து வந்ததால், அதையும் தட்டிக்கழிக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வந்தார். இவருக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது இரவின் நிழல் தான். பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தார் ரேகா நாயர். அவர் நிர்வாணமாக […]

பொழுதுபோக்கு

நகைச்சுவை நடிகர் தங்கதுரை நெகிழ்ச்சி: அப்படி என்ன நடந்தது

அசத்தபோவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் தங்கதுரை. பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கிய தங்கதுரை முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது `லால்சலாம்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். இது குறித்து தங்கதுரை கூறுகையில், “சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்த ரஜினியை இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்பேன் என்றும், அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்றும் எதிர் பார்க்கவில்லை. ரஜினியுடன் நடித்தது என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக இருப்பதோடு சினிமாவுக்குள் […]

உலகம்

பிரான்ஸ் போராட்டத்தை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபடும் நபர்கள்

பிரான்ஸ் நாட்டில் நஹெல் என்ற 17 வயது சிறுவனை பொலிஸார் சுட்டுக் கொன்றதை அடுத்து ஏற்பட்ட கலவரம் ஒரு வாரம் கடந்த நிலையிலும் தொடர்ந்து வருகிறது. போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி, அரசு சொத்துக்களை எரித்தும், கடைகளை சூறையாடியும் வருகின்றனர். அண்மையில், சில மர்ம நபர்கள் கார் காட்சியறை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கலவரம் தொடர்பாக பொலிஸார் இதுவரை சுமார் 1000 பேரை கைது செய்துள்ளனர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளனர். எனினும் நிலைமையை […]