May 3, 2025
Follow Us
ஐரோப்பா செய்தி

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு செர்பிய அரசுக்கு அழுத்தம்!

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க செர்பியா அதிக அழுத்தத்தை எதிர்கொள்வதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அந்நாடு கண்டித்துள்ளது. இருப்பினும் மொஸ்கோவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொருளாதார தடைகளுக்கான மேற்கத்தேய நாடுகளின் அழைப்பை எதிர்த்துள்ளது. இந்நிலையில், மொஸ்கோ மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என செர்பியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார். செர்பியா அதன் முக்கிய முதலீட்டாளர்கள் […]

செய்தி தமிழ்நாடு

விலை உயர்வு கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் : தமிழகத்தில் தடைபட்ட ஆவின் பால் விநியோகம்!

  • April 14, 2023
  • 0 Comments

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 33 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினருடன் பால் வளத்துறை அமைச்சர் நாசர் நடத்திய பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து அறிவித்தப்படி, இன்று முதல் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்காமல் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் பால் […]

செய்தி வட அமெரிக்கா

இழந்த இடத்தை பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ள டிரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், டெக்சஸின் வாகோ நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக டிரம்ப் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், குடியரசுக் கட்சியினால் இது தொடர்பிலான அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை. இந்நிலையிலே, வாகோ நகரில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட டிரம்ப், தான் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால், எதிர்ப்பாளர்களின் ஆட்சியை வீழ்த்தி அமெரிக்காவை மீண்டும் சுதந்திர நாடாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதோடு தான் மீண்டும் […]

ஐரோப்பா செய்தி

புதிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ; பிரித்தானிய நாடாளுமன்றம் முன் திரண்ட நூற்றுக்கணக்கானோர்

  • April 14, 2023
  • 0 Comments

புதிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கம் முன் திரண்டார்கள். பிரித்தானிய அரசு, பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோருக்கெதிராக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.அது தொடர்பான மசோதா ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேனால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மசோதா மீதான விவாதம் துவங்கியுள்ளது. அந்த சட்டம், பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரை ஜாமீனில் வரமுடியாத வகையில் கைது செய்து, நாடு கடத்தவும், அப்படி […]

செய்தி தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பயணம்

  • April 14, 2023
  • 0 Comments

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்  சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திருவள்ளூர் மாவட்டம்  பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பேருந்து நிருத்தம் அருகே நடைபெற்று வருகிறது , இதில் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில்  குடும்ப நல நிதியைய் அரசு மற்ற துறைகளில் உயர்த்தி வழங்குவது போல டாஸ்மாக் பணியாளர்களுக்கும்  மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டியும், […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு மிக் போர் விமானங்களை வழங்க முன்வரும் போலந்து!

  • April 14, 2023
  • 0 Comments

வரும் நான்கு முதல் ஆறு வாரங்களில் உக்ரைனுக்கு தேவையான மிக் போர் விமானங்களை வழங்க முடியும் என போலந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.  இந்த தவலை போலந்து பிரதமர் வெளியிட்டுள்ளார். உக்ரைன் பல மாதங்களாக F-16 F-16 Fighting Falconsஎன்ற ஜெட் விமானங்களைக் கேட்டு வருகிறது. இந்த ஏற்பாடு ரஷ்யாவுடனான போரில் சமநிலையைக் குறைக்கும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இதுவரை மேற்கத்திய நட்பு நாடுகள் குறித்த ஜெட் விமானங்களை  வழங்க மறுத்துவிட்டன – அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யா மீதான போர்குற்ற விசாரணை : ஐ.சி.சியின் அதிகார வரம்பை மறுக்கும் கிரெம்ளின்!

  • April 14, 2023
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை என கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக நாடுகடத்தியது, மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறைவைத்தது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்தும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஹேக் அடிப்படையிலான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மொஸ்கோ அங்கீகரிக்கவில்லை எனக் கூறினார். நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள குறித்த நீதிமன்றம் இதுவரை போர் குற்றங்கள் […]

செய்தி வட அமெரிக்கா

உயிரை காத்த மனிதன்.. நன்றி தெரிவிக்க வீட்டிற்கே வந்த மான் கூட்டம்: வைரல் வீடியோ

உயிரைக் காப்பாற்றிய மனிதனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மான் கூட்டம் ஒன்று வீட்டு வாசலுக்கே வந்து நிற்கும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோவில், முதலில் மான் ஒன்று வேலி தாண்டிய போது கம்பியில் சிக்கிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.அப்போது அந்த வழியில் நின்ற மனிதர் ஒருவர், கம்பி வேலியில் சிக்கிய மானை அதிலிருந்து விடுத்தார். ஆனால் நீண்ட நேரமாக கம்பியில் சிக்கிக் கொண்டு இருந்ததால் மான் களைத்துப்போய், […]

செய்தி தமிழ்நாடு

சர்வதேச கருத்தரங்கு

  • April 14, 2023
  • 0 Comments

சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் துறை, வேதியல் துறை, ஆராய்ச்சி இயக்குனரகம் ஆகியவற்றின் சார்பில் இந்தோ ஜெர்மன் DEEPT2023 என்கிற(Developments in Established  and Emerging Photovoltaic Technologies)நிறுவப்பட்ட மற்றும் வளரும் போட்டோவோல்டிக்  தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அயல் நாடுகளலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிருந்து 600க்கும்  lமேற்பட்ட இயற்பியல்,வேதியல், நானோ தொழில்நுட்பம் பயிலும் […]

ஐரோப்பா செய்தி

நடுவானில் தடுமாறிய ஜேர்மன் விமானம்; ஆதாரங்களை அழிக்க பணிகளுக்கு உத்தரவிட்டதால் வெடித்துள்ள சர்ச்சை!

  • April 14, 2023
  • 0 Comments

ஜேர்மனியின் லுஃப்தான்சா விமானக் குழுவினர், கடுமையான தடுமாற்றத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை அழித்துவிடுமாறு பயணிகளுக்கு உத்தரவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரத்திலிருந்து ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகரத்திற்கு சென்ற லுஃப்தான்சா விமானம் LH469, கடுமையான தடுமாற்றத்தில் கிட்டத்தட்ட 4,000 அடி கீழே விழுந்ததால், அவசரமாக வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் திருப்பி விடப்பட்டது.கடுமையான தடுமாற்றம் காரணமாக விமானத்தில் இருந்த 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லுஃப்தான்சா விமானத்தல் இருந்த பணியாளர்கள் இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் […]