இலங்கையில் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலை
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், இவ்வாறு பொருட்கள் குறைவடைவதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை. பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வெங்காயம், பருப்பு, கிழங்கு, சீனி, கோதுமை […]