வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீர் கனமழை,வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி; 39,000 வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு

  • February 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் திடீரென பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, 9 பேர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக கனமழை பெய்ததாகவும், குறிப்பாக கென்டக்கி என்ற பகுதியில் மட்டும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல […]

உலகம்

புதிய AI வசதியை வெளியிட தயாராகும் எலான் மஸ்க்

  • February 17, 2025
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய செல்வந்தர் எலான் மஸ்க் தமது xAI நிறுவனம் ‘Grok 3’ எனும் தானியக்க உரையாடல் வசதியை வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளார். அது குறித்து அவர் X தளத்தில் பதிவிட்டார். பூமியில் ஆக ஆற்றல்வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியாக Grok 3 இருக்கும் என்று அவர் கூறினார். தவறுகளைச் சரிசெய்ய தரவுகளைப் பரிசீலிக்கும் ஆற்றலை Grok 3 கொண்டுள்ளது. சந்தையில் OpenAI’s ChatGPT, DeepSeek ஆகிய செயற்கை நுண்ணறிவு வசதிகள் இருக்கும் வேளையில் xAI போட்டித்தன்மையை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை – 2025ஆம் ஆண்டுக்கான செலவுத் திட்டம் (live)

  • February 17, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். அதற்கமைய, *தற்போது உள்ள சுங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சுங்க சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். * வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வணிக ஒத்துழைப்புக்குப் பயன்படுத்தவுள்ளோம். * முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல் * பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த நடவடிக்கை. * பொருளாதார சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை – வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம் (live)

  • February 17, 2025
  • 0 Comments

நிதி அமைச்சர் என்ற வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்தி வருகிறார். எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சி என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். “எமக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச தரப்பினருடன் வலுவான தொடர்புகளை பேணி முதலீட்டாளர்களுடன் […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

119 இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்கா

  • February 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு போட்டு அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளத. ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 பேரும் கடந்த 5 ஆம் திகதி இந்தியா வந்தடைந்தனர். இந்த நிலையில், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரின் கை, கால்கள் கட்டப்பட்டது நாடாளுமன்றம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் நாடு கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் கிடையாது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

  • February 17, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காகக் கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது பாதீட்டு உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று […]

இலங்கை செய்தி

இலங்கை வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

  • February 17, 2025
  • 0 Comments

இலங்கையில் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

  • February 17, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் மாற்றமடைந்துள்ளது. இதற்கான விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.34 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.59 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஐரோப்பா

ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து முடிவு செய்ய அவசர உச்சி மாநாடு

  • February 17, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் குறித்த அவசர உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பிய தலைவர்கள் இன்று கூட உள்ளனர். அதன்படி, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் பேச்சுவார்த்தைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சவுதி அரேபியாவில் ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளார். இந்த அவசர உச்சிமாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்து கொள்ள உள்ளார். இருப்பினும், இந்த […]

இலங்கை

இலங்கையில் புதிய அரசின் கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று!

  • February 17, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை 10.30 மணிக்கு சுதந்திர இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 25 ஆம் […]