மத்திய கிழக்கு

04 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ் போராளிகள்!

  • February 20, 2025
  • 0 Comments

ஹமாஸ் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளன. ​​கான் யூனிஸுல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் – நான்கு வயது ஏரியல் மற்றும் ஒன்பது மாதக் குழந்தை கிஃபிர் ஆகியோரின் உடல்களை விடுவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் உறுப்பினர்கள் முதல் சவப்பெட்டியை எடுத்துக்கொண்டு செஞ்சிலுவைச் சங்க வேன்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆயுதமேந்திய ஹமாஸ் போராளிகள் மக்களை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், உடல்கள் மக்களிடம் காண்பிக்கப்படாமல் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

“பத்து கோடி கொடுத்தால் மீண்டும் அப்படி நடிப்பேன்” சந்தானம்

  • February 20, 2025
  • 0 Comments

சுந்தர் சி யின் மதகஜராஜா படம் பழைய சந்தானத்தை தூண்டிவிட்டது. மக்கள் பழையபடி இந்த படத்தில் அவரது கவுண்டர் காமெடிகளை ரசித்து ஆரவாரம் செய்தனர். அதில் இருந்து அவரது ரசிகர்களுக்கு பழையபடி அவர் காமெடி பண்ண வேண்டும் என்ற ஒரு ஏக்கம் தோன்றியுள்ளது. இப்பொழுது சுந்தர் சி மதகஜராஜா கூட்டணியில் மற்றொரு படத்தை எடுக்க திட்டம் போட்டு வருகிறார். இந்த கூட்டணிக்காக எல்லா தயாரிப்பாளர்களும் காத்து கிடக்கிறார்கள். இதனால் விஷால், சந்தானம் கூட்டணியில் ஆம்பள படத்தின் இரண்டாம் […]

ஐரோப்பா

உக்ரைனின் முக்கிய இடங்களுக்கு படைகளை அனுப்ப தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!

  • February 20, 2025
  • 0 Comments

ரஷ்யாவுடனான எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் தொடர்ந்து அமைதியைப் பாதுகாக்க உதவும் வகையில் பிரிட்டிஷ் மற்றும் பிற ஐரோப்பிய துருப்புக்கள் உக்ரைன் நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் அணு மின் நிலையங்களுக்கு அனுப்பப்படலாம் என்று மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்தவொரு சாத்தியமான படையின் அளவையும் அதிகாரிகள் வழங்க மறுத்துவிட்டனர், ஆனால் அது 30,000 க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்டிருக்கும் என்று சமிக்ஞை செய்தனர். சர் கெய்ர் ஸ்டார்மர் வரும் நாட்களில் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்புடன் இந்த திட்டத்தைப் பற்றி விவாதிப்பார் […]

இலங்கை

இலங்கை : கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பெண்ணை தேடி வரும் பொலிஸார்!

  • February 20, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. கணேமுல்ல சஞ்சீவின் கொலை தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் குறித்த படுகொலைக்கு துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவந்தவர் இந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன.ஸ  01. பெயர் – பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி 02. வயது – 25 […]

வட அமெரிக்கா

உக்ரேனிய அதிபர் ஒரு ‘சர்வாதிகாரி’ – ஜெலன்ஸ்கியை தாக்கி பேசிய ட்ரம்ப்

  • February 20, 2025
  • 0 Comments

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கிப் பேசியதாக பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. உக்ரேன் போர் தொடர்பில் சவூதி அரேபியாவில் அமெரிக்காவும் ர‌ஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தின. அந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரேன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதனையடுத்து, மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பொய்த் தகவல்கள் நிறைந்த உலகில் டிரம்ப் வாழ்வதாக ஸெலென்ஸ்கி சாடினார். அதற்குப் பதிலடியாக, முன்னைய […]

இலங்கை

இலங்கையில் மேலும் அதிகரித்த தங்க விலை!

  • February 20, 2025
  • 0 Comments

இலங்கையில் தங்க விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 234,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 214,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 175,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,813 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,938 ரூபாவாகவும், விற்பனை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அச்சுறுத்தும் பறவை காய்ச்சல் – முட்டை விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

  • February 20, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் கோழி முட்டைகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்து, அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஒரு நபருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் முட்டைகளை விற்க கடை உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 16 கோடி பறவைகள் இறந்துள்ளன.

இலங்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கம்

  • February 20, 2025
  • 0 Comments

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “நேற்று நீதிமன்ற வளாகத்தினுள் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்தும் கடந்த காலங்களில் இவ்வாறான ஒருங்கமைக்கப்பட்ட குழுக்களால் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தின சம்பவத்தினை அரசு கடும் அவதானத்தினை செலுத்தியுள்ளது. இது குறித்த தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட […]

செய்தி விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர் அபராதம்!

  • February 20, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியில் தசுன் சானக்க காயமடைந்தார். இந்தநிலையில் சர்வதேச போட்டி ஒன்றில் விளையாடுவதாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அதனை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கு

ஈரம் படத்தின் வெற்றி – மர்மங்கள் நிறைந்த “சப்தம்” படத்தின் டிரைலர் வெளியானது…

  • February 20, 2025
  • 0 Comments

ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் ‘சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள […]