யூனின் பதவிநீக்கத்தை ஆதரித்தும் எதிர்த்தும் நடைபெறும் பேரணிகளளால் கொரியப் பல்கலைக்கழகங்களில் குழப்பம்
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் பதவிநீக்கத்தை ஆதரித்தும் எதிர்த்தும் நடைபெறும் பேரணிகள் அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வரை பரவியுள்ளது. மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ள இந்தப் பிரச்சினை, பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. கொரியப் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 21ஆம் திகதி, யூனின் பதவி நீக்கத்தை எதிர்த்தும் ஆதரித்தும் ஒரே நேரத்தில் பேரணிகள் நடைபெற்றன.முன்னதாக, சோல் தேசியப் பல்கலைக்கழகத்திலும் யன்சேய் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் பேரணி நடத்தினர். இம்மூன்று பல்கலைக்கழகங்களும் தென்கொரியாவின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்களாகக் கருதப்படுகின்றன.மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் […]