இலங்கை

இலங்கை : தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சிக்கல்!

  • February 26, 2025
  • 0 Comments

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் கூறுகிறது. வணிகர்கள் தங்கள் திவாலான வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை என்று அச்சங்கத்தின் தலைவர் அபேசுந்தரா கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சம்பளத்தை ரூ. 21,000 ஐ ரூ. 27,000 ஆக உயர்த்தும்போது, ​​அங்கேயே ரூ. 6,000 வித்தியாசம் உள்ளது. நாங்கள் 50-60 […]

உலகம்

சூடானில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ விமானம் ; 20க்கும் மேற்பட்டோர் பலி

  • February 26, 2025
  • 0 Comments

வெள்ளை ஓம்துர்மானின் வடக்குப் பகுதியில் உள்ள வாடி சீட்னா ராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சூடான் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ராணுவ மற்றும் மருத்துவ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. விமான விபத்து பெரும்பாலும் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கொல்லப்பட்டவர்களில் கார்ட்டூமில் மூத்த தளபதியான மேஜர் ஜெனரல் பஹ்ர் அகமதுவும் ஒருவர், இவர் முன்னர் முழு தலைநகர் […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் பெய்த ஆலங்கட்டி மழை, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 29 பேர் மரணம்

  • February 26, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களை ஆலங்கட்டி மழை, கனமழை, திடீர் வெள்ளம் வாட்டி வதைத்ததை அடுத்து, 29 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) தெரிவித்தனர். ஃபாரா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை, திடீர் வெள்ளம் காரணமாக 21 பேர் உயிரிழந்தாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் அந்த மாநிலத்தின் பேரிடர் நிர்வாகத்துறையின் தலைவர் திரு முகம்மது இஸ்‌ராயில் சயார் தெரிவித்தார். உயிரிழந்த அனைவரும் அப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்ட இரண்டு குடும்பங்களைச் […]

பொழுதுபோக்கு

தந்தையுடன் தொடர்பு… மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து அதிர்ச்சி செய்தி

  • February 26, 2025
  • 0 Comments

நடிகை சில்க் ஸ்மிதாவின் அழகு, மற்றும் போதை ஏற்றும் கண்களை பார்த்து பல ரசிகர்கள் சொக்கி கிடந்தனர். அதே போல் பெண்களே பார்த்து ரசிக்கும் விதத்தில் இருக்கும். சில்க்கின் கிளாமரை ஆண்கள் மட்டும் அல்ல, பல ரசிகைகளும், நடிகைகளும் கூட ரசித்துள்ளனர். இதை சுலக்ச்சனா, அனுராதா போன்ற நடிகைகள் வெளிப்படையாகவே கூறி உள்ளனர். சினிமாவில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பணியை துவங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதித்து, சில வருடங்களிலேயே பெரிய ஸ்டார் […]

ஐரோப்பா

போப் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் : வாடிகனில் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை

  • February 26, 2025
  • 0 Comments

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் நிமோனியா பாதிப்பால் கடந்த 14ம் திகதி முதல் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரு நுரையீரலிலும் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப கட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருந்தாலும் அது கட்டுக்குள் இருப்பதாக கூறி உள்ளனர். இந்நிலையில், 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு போப் பிரான்சிசின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து வாடிகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “போப் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

  • February 26, 2025
  • 0 Comments

மினுவங்கொடை பத்தண்டுவன பகுதியில் இன்று காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவர் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

உலகம்

இருளில் மூழ்கிய சிலி – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு – அவசர நிலை அறிவிப்பு

  • February 26, 2025
  • 0 Comments

சிலியில் நாடுமுழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு அவசரநிலையை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகரான சாண்டியேகோ உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி ஊரடங்கும் நடப்புக்கு வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான மின்தடையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததாகக் கூறப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்களிலிருந்தும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ரயில் சேவை நிறுவனம் அதன் ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது. போக்குவரத்து விளக்குகளும் செயல்படாததால் […]

உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

  • February 26, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரை பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 6.55 க்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.  

வாழ்வியல்

இரவு தூங்கிய பிறகும் பகலில் தூக்கம் வருவதற்கு காரணம்

  • February 26, 2025
  • 0 Comments

ஆரோக்கியமாக இருக்க நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஒருவர் நன்றாகவும் ஆழ்ந்தும் தூங்கினால், அவர் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஆனால் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகும், ஒருவர் பகலில் தூக்கம் வருவது போல் உணர்கிறார் என்றால், அது பிரச்சனையின் அறிகுறி. எப்போதும் தூக்கம் வருவது போல் இருப்பது ஏதோ ஒரு கடுமையான பிரச்சனையைக் குறிக்கிறது என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். அதிகப்படியான தூக்கம் போன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு […]

அறிந்திருக்க வேண்டியவை இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

உலகின் பல நகரங்களில் தாங்க முடியாத எலித் தொல்லை – அதிகரிக்கும் முறைப்பாடுகள்

  • February 26, 2025
  • 0 Comments

உலகின் பல நகரங்களில் தாங்க முடியாத எலித் தொல்லையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. முதன்முறையாக 16 நகரங்களில் எலிக் கூட்டங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அவற்றுள் 11 நகரங்களில் எலிகளின் சேட்டைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. பிரசல்ஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களில் சுதந்திரமாக எலிகள் ச் சுற்றித் திரிவதாக தெரியவந்துள்ளது. ஆம்ஸ்டர்டாமில் கணக்கு வழக்கில்லாமல் எலிகள் பெருகிவிட்டதாக தெரியவந்துள்ளது. தெருவோர உணவுக் கடைகளின் மிச்சம் மீதி, உள்ளூர், வெளியூர் மக்கள் […]