இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிரிஸ்டலினா ஜோஜிவாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்

  • April 10, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு  விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில்,  அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் சீனப் பிரதமருடன் […]

இலங்கை

புலனாய்வு தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கைக்கு அழுத்தம்!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், அமெரிக்காவின் சி.ஐ.ஏ பிரிவின் பிரதான […]

இலங்கை

ஆபிரிக்க நாடுகளுடனான இலங்கையின் வணிக நடக்கடிகைகளை விரிவுபடுத்த தீர்மானம்.

  • April 10, 2023
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சின் பொருளாதார இராஜதந்திர செயற்திட்டத்தின் ஓரங்கமாக ஆபிரிக்க கண்டத்தில் இலங்கையின் நிலவுகையை விரிவுபடுத்துவதை முன்னிறுத்திய வணிகப்பேரவையின் கூட்டம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆடையுற்பத்தி, மருந்துப்பொருள் உற்பத்தி, கட்டுமானம், நிதி, புதுப்பிக்கத்தக்க சக்திவலு, மட்பாண்ட உற்பத்தி என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு துறைசார்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட வணிகங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். ஆபிரிக்காவை பாருங்கள் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்தக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் நேற்றைய […]

இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு.

  • April 10, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார். இந்தச் சந்திப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பின் மூலம் எவ்வாறு அரசியலை நகர்த்தலாம் என்ற விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்தும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விரிவாக […]

இலங்கை

நிதித் தேவையை திறைசேரி கோரினால் வழங்கமுடியும் என மத்திய வங்கி அறிவிப்பு

  • April 10, 2023
  • 0 Comments

திறைசேரி கோரும் நிதி தேர்தலுக்காக அல்லது வேறு தேவைக்கா என்பதை ஆராய்வது மத்திய வங்கியின் கடமை அல்ல. ஒரு மாதத்திற்கான செலவீனங்கள் குறித்து திறைசேரி வாராந்தம்  தேவையான நிதி அவசியத்தை அறிவித்தால் அவர்களுக்கான நிதியை மத்திய வங்கி விடுவிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அந்த பணம் எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதை மத்திய வங்கி அவதானிக்காது என  தெரிவித்துள்ளார். அரச துறையினருக்கான கொடுப்பனவுகள், கடன் செலுத்துகை போன்ற விடயங்கள் இருப்பின் அவற்றை கருத்தில் […]

இலங்கை

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்!

  • April 10, 2023
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபரி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 5 மணி முதல் அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை பக்தர்களை கொண்டு செல்லும் சேவையில் ஈடுபட்டுள்ளன. கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவானில் இருந்து காலை 6 மணி இடம்பெறுகிறது. படகு சேவையில், குறிக்கட்டுவானில் இருந்து பயணிக்கும், நபர் ஒருவருக்கு, இரு வழிப் […]

இலங்கை

யாசகரின் குழந்தை மீட்பு : கரு கலைந்ததால் குழந்தை ஆசையில் பெண் செய்த செயல்!

  • April 10, 2023
  • 0 Comments

பெண் யாசகர் ஒருவரின் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணொருவர் வனாத்துவில்லு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பம்பலப்பிட்டிய பொலிஸார், கைக்குழந்தை தங்களுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தனர்.குழந்தையை கடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஓட்டோவின் சாரதி, தரகர்களாக செயற்பாட்ட நான்கு ஆண்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் கணவன் வெளிநாட்டில் ​பணியாற்றுகின்றார். அந்தப் பெண் பிரசவத்துக்காக கொழும் பிரதேசத்தில் உறவினர் வீட்டில் […]

இலங்கை

தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க WHO இணக்கம்!

  • April 10, 2023
  • 0 Comments

நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு ஜெனிவாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உடனான கலந்துரையாடலின் போது இலங்கையின் தற்போதைய சுகாதார நிலைமை குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு எதிராக மூதூரில் போராட்டம்!

  • April 10, 2023
  • 0 Comments

திருகோணமலை ,மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் வைத்தியசாலைக்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார கட்டண அதிகரிப்பை இல்லாமல் செய், வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்,சம்பள அதிகரிப்பை வழங்கு, அதிகரித்த வட்டி வீதத்தை இல்லாமல் செய், புதிய வரிக் கொள்கையை உடன் நிறுத்து ,மேலதிகநேர கொடுப்பணவை வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு […]

இலங்கை

இராணுவத்தினர் கடமைக்கு இடையூறு : யாழில் இருவர் கைது!

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி , இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் […]