இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதியாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளதாக சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, ஒரு […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – 25 வயதுடைய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • April 10, 2023
  • 0 Comments

புஸல்லாவ தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புஸல்லாவ சொகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து நேற்று மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார். அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் […]

இலங்கை

உலகின் சிறந்த மாடல் போட்டியில் இலங்கையின் சந்தானி விஷ்மிதா மூன்றாமிடம்

  • April 10, 2023
  • 0 Comments

உலகின் சிறந்த மாடல் 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சந்தானி விஷ்மிதா பீரிஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். உலக அழகி அமைப்பினால் இருபத்தி ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி எகிப்தில் உள்ள சன்ரைஸ் ஒயிட் ஹில்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்றது. நாற்பத்து மூன்று போட்டியாளர்களிடமிருந்து இறுதி வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் போட்டி நடைபெற்றது. உலகின் சிறந்த மாடல் கிரீடத்தை மெக்சிகோ அழகி மரியானா மெசியாஸ் வென்றார்.

இலங்கை

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு – இலங்கையில் நடந்த சோகம்

  • April 10, 2023
  • 0 Comments

கெபிதிகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் உள்ள தாயொருவர், தனது இரு அங்கவீனமான மகன்களுடன் இன்று (05) தற்கொலை செய்யும் நோக்கில் கிணற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயுடன் மற்றையவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கபிதிகொல்லேவ கனுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சாந்தகே ரவிது மிஹிரங்க என்ற இருபத்தொரு வயதுடைய இளைஞர் ஆவார். உயிரிழந்த இளைஞனின் 48 வயதுடைய தாயும் ஒன்பது […]

இலங்கை

சிறப்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள அரசாங்கம்

  • April 10, 2023
  • 0 Comments

இந்த ரமழானின் போது முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரமலான் சீசன் மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை நடைபெற உள்ளது. அதிகாரிகள் சமயச் சடங்குகளில் ஈடுபடும் வகையில் கூடுமானவரை […]

இலங்கை

மாணவியை முத்தமிட்ட ஆசிரியர் கைது

  • April 10, 2023
  • 0 Comments

மாணவியை முத்தமிட்ட ரத்கம பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு முத்தம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியை, படிக்கட்டில் சென்ற மாணவனின் கையை இழுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் தொழிநுட்ப ஆசிரியர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை

ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம்!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக  ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரைஸர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் , பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரையும் சந்தித்து […]

இலங்கை

வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த அருங்காட்சியத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புசபை!

  • April 10, 2023
  • 0 Comments

தெற்காசியப்பிராந்திய வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை ஈடுபட்டு வருகிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் மற்றும் உள்நாட்டில் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை […]

இலங்கை

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி

  • April 10, 2023
  • 0 Comments

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளா

இலங்கை

யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நியமிக்க திட்டம்

  • April 10, 2023
  • 0 Comments

யாழ். மாநகர சபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்று காலையில் தமிழ் அரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், பெரும்பாலானோர் சொலமன் சிறிலுடைய பெயரை முன்மொழிந்தனர். அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார். யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சொலமன் சிறிலுக்கான ஆதரவை […]