இலங்கை

இரண்டு பிள்ளைகளுடன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்து கதறி அழுத பெண்

  • April 10, 2023
  • 0 Comments

இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க வழியில்லை என 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் செவாநகர பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்து கதறி அழுத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உடவலவ, தனமல்வில வீதி, 8 கன்குவ பிரதேசத்தைச் சேர்ந்த பி.எம்.அனோஜா சமன்மலி என்ற பெண், கணவன் தன்னையும் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகக் கூறி கதறி அழுதார். அந்த பெண்ணுக்கு 4 மற்றும் ஒன்றரை வயதில் இரு […]

இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது என ஜனாதிபதி தெரிவிப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

இந்த ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்குறிப்பிட்டுள்ளார் குறித்தும் நாடாளுமன்றமே முடிவெடுக்கும்  என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக ஒதுக்கிய நிதியை விடுவிக்கப்படுவதற்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்தும் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பிரதிநிதிகள் உள்ள அதியுயர் சபையே நாடாளுமன்றம். எனவே, நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை எவரும் […]

இலங்கை

மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை குறித்த 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்

  • April 10, 2023
  • 0 Comments

க்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானதுடன், அக்கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சிவில் மற்றும் […]

இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலை குறைவடையும் சாத்தியம்!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் எரிபொருளுக்கான விலை குறைவடையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிவாயு விலைகளும் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

யாழ் அச்சுவேலிப் பகுதியில் வாள்வெட்டு!

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழு ஒன்று துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார் கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்திருந்த நிலையில் மற்றைய குழுவை சேர்ந்தவர்கள் அவனை துரத்தி துரத்தி வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் பாரதி வீதி பத்தமேனியைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவனே வாள்வெட்டுக்கு […]

இலங்கை

ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானம் -மீண்டும் நிராகரித்தது இலங்கை!

  • April 10, 2023
  • 0 Comments

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம் நிறைவேற்றிய தீர்மானத்தை  ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும்தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ள இலங்கையின் ஐநாவிற்கான அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்ட்டவை போன்ற தீர்மானங்கள்இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை மாறாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  நோக்கத்திற்கு அவை பாதி;ப்பை  ஏற்படுத்தும் எனஅவர் தெரிவித்துள்ளார். ஐநாவின் உறுப்பு நாடுகளிடம் பற்றாக்குறையாக […]

இலங்கை

யாழில் புத்தகப் பையுடன் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

  • April 10, 2023
  • 0 Comments

ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் என ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தகப் பை முதுலில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார். கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்று விட்டு குறித்த இளைஞன் உயிரை மாய்த்துக் […]

இலங்கை

தேர்தலை மார்ச் 19இற்கு முன் நடத்துமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை!

  • April 10, 2023
  • 0 Comments

நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவித்துள்ள நிலையில் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கையை எடுக்குமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளனர். குறித்த கடிதத்தில், திறைச்சேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பயனற்றது எனவும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இனியும் தேர்தல் வாக்கெடுப்பை தாமதிக்காமல் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை துரிதமாக […]

இலங்கை

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அதிசயம்.! மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள்

  • April 10, 2023
  • 0 Comments

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் இன்று மாசி மக உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை மாசிமகதீர்த்தத்தின் போது அம்மன் தீர்த்தமாட வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்துச் சென்ற அதிசய காட்சி இடம்பெற்றது. இந்நிலையில் வானில் வட்டமிட்ட கருடன் அம்மனை தரிசித்துசென்ற காட்சி நயினை அம்பாள் அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதேவேளை இன்றைய தினம் கடல், குளம், ஆறு ஆகியவற்றில் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை […]

இலங்கை

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்த திட்டம்!

  • April 10, 2023
  • 0 Comments

இந்திய ரூபாவை இலங்கையுடனான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்கிகள் சுற்றுலாவுக்கான செயல்முறையை செயல்படுத்தும் கணக்குகளைத் தொடங்கிய பின்னர், வர்த்தகம் மற்றும் மூலதன பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்னெடுத்துச் செல்வதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்திய மத்திய வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி 2022 இல் இந்த செயல்முறையை செயல்படுத்திய பின்னர், இலங்கை வங்கி, ஸ்டேட் பேங்க் ஒஃப் […]