ஒன்ராறியோவில் பேரன் எனக்கூறி பாட்டியிடம் மோசடி செய்ய முயன்ற இளைஞன் -சாதுர்யமாக செயல்பட்ட பாட்டி..
நான் உங்கள் பேரன், எனக்கு உதவி வேண்டும் என்று கூறி, பாட்டி ஒருவரை ஏமாற்ற முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.ஆனால், பாட்டியில் சாதுர்யமான செயலால், இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அவர். ஒன்ராறிb யோவின் விண்ட்சரில் வாழும் Bonnie Bednarik என்னும் பெண்மணிக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.தொலைபேசியில் அழைத்தவர், பாட்டி, நான்தான் உங்கள் பேரன், என் நண்பனுடன் காரில் செல்லும்போது ஒரு விபத்தாகிவிட்டது, அவன் காரில் போதைப்பொருள் வைத்திருந்திருக்கிறான்.அவனை பொலிஸார் கைது செய்துவிட்டார்கள். அவனை ஜாமீனில் […]