வீட்டு பணிப்பெண்ணாக அரபு நாட்டிற்கு சென்ற பெண் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!
அரபு நாட்டிற்கு பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவராவார். அவரது கணவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரபு நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற அவர், இரண்டு மாதங்களாக […]