இலங்கை செய்தி

இலங்கையில் வாகனங்களில் விலை குறையாது!! வெளியாகியுள்ள அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் வாகனங்களின் விலை குறையாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் வாகன விலைகள் மேலும் அதிகரிக்கும் என அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். பயன்படுத்திய சில வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்

இலங்கை செய்தி

முறையற்ற வரி விதிப்புக்கு எதிராக போராட்டம் : அவசர பிரிவை தவிர வேறு எதுவும் இயங்காது என எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்திய அரச மருத்து அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் (திங்கட்கிழமை) 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாதபட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். இவ்வாறாக நாடு முடங்கும் பட்சத்தில் அதனால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பை தவறவிட்ட ஜி 20 நாடுகள் : சர்வதேச மன்னிப்புசபை அதிருப்தி!

  • April 11, 2023
  • 0 Comments

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. […]

இலங்கை செய்தி

தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட முஸ்தீபு : பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

  • April 11, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்து வருகின்ற நிலையில் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள புளொட், ரெலோ, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுக்கிடையில் முதற்கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த பேச்சுவார்த்தையின்போது கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான ஆரம்பப் […]

இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே விலை குறைய காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்ற இராணுவத்தினர் இலங்கை திரும்பவில்லை என அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

பிரிகேடியர் உட்பட 13 இலங்கை இராணுவ அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று நாடு திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களை அடுத்து, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு இலங்கை இராணுவ அதிகாரிகள், அவர்களின் படைப்பிரிவுத் தளபதிகளிடம் அனுமதி பெற வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும் விளக்கமளித்துள்ளது. இராணுவ சேவையை விட்டு வெளியேறி, […]

இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டம் தொடர்பில் விரைவில் வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பிலான சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய சட்டம் பெரும் சர்ச்சைக்குரிய 1978ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தினை பதிலீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த உத்தேச புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரீ தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை ரத்து செய்து விட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை அறிமுகம் செய்வதாக அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித […]

இலங்கை செய்தி

ராஜபக்சகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள்; நாமல் பதிவிட்டுள்ள ட்வீட்!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச உறவுகள் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது நாடாளுமன்றத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை பெருமைக்குரியதாகும். இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் பொது நிர்வாகம், தணிக்கை நிறுவனங்கள் குறியீடு […]

இலங்கை செய்தி

ஜெர்மனியில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

ஜெர்மனி மொழியை இலவசமாகக் இலங்கையர்களுக்கு கற்பதற்கான பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை பத்திரிகை சபையின் தலைவரராகவும் செயற்படுபவரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த பாடத்திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார், மேலும் பல இணையத்தள சேவைகள் ஊடாக இதனை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்மயமாக்கலில் உலகின் முன்னணி நாடான ஜெர்மனியில் அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையர்களும் ஜேர்மனியில் தொழில்களுக்குச் […]

இலங்கை செய்தி

யாழில் அச்சுறுத்தும் கொள்ளை கும்பல் – சிக்கிய மூவர்

  • April 11, 2023
  • 0 Comments

யாழில் வீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். யாழ். சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் இணுவில் பகுதியில் வீடொன்றில் […]