இலங்கை செய்தி

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை இடைநிறுத்த கோரி மனுத்தாக்கல்!g

  • April 11, 2023
  • 0 Comments

தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கக் கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதிகளாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தனது மனுவை விசாரித்து இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் […]

இலங்கை செய்தி

கள்ளத்தொடர்பால் பறிபோன பெண்ணின் கூந்தல்; சிலாபத்தில் அரங்கேறிய சம்பவம்!

  • April 11, 2023
  • 0 Comments

இரண்டு பிள்ளைகளின் தாயை தாக்கி அவரது கூந்தலை அறுத்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம், அம்பகந்தவில பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் அவரது கணவர், ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் தொழில் செய்து வருகிறார்.தனது கணவருடன் குறித்த பெண் தகாத தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகம் காரணமாக அப்பெண் தாக்கப்பட்டு, கூந்தல் அறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.வெட்டப்பட்ட கூந்தலை சந்தேக நபர்களான பெண்கள் எடுத்துச் சென்றுள்ளனர் சம்பவம் குறித்து தாக்குதலுக்கு […]

இலங்கை செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை அரச ஊழியர்கள் அரச விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் விசேடமாக ஆராய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள சகல தொழில் வாய்ப்புக்களுக்குமான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளின் போது இவ்வாறு செயற்படுதாக தெரியவந்துள்ளது தற்போது, அரச சேவையில் உயர் பதவிகளில் கூட அரச விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் நாசகார மனநிலை கொண்டவர்கள் இருப்பதாகவும், அவர்கள் தந்திரமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதாகவும் கிடைத்துள்ள புலனாய்வு […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிக்க காரணம் வெளியானது!

  • April 11, 2023
  • 0 Comments

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க இதனை தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருந்த கணிப்பு தொடர்பில் பேராசிரியர் தனது […]

இலங்கை செய்தி

இலங்கையில் டொலரைக் கொடுத்து ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் மக்கள்

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றது. இதனால், கொழும்பு பிரதான நாணயமாற்று நிலையங்களில், டொலரைக் கொடுத்து, ரூபாவைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி, நேற்றைய தினம், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.36 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 325.52 ரூபாவாகவும் இருந்தது. இந்த நிலையில், இன்றைய […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – ஒன்றரை வயது மகளுக்கு தந்தை செய்த செயல்

  • April 11, 2023
  • 0 Comments

பக்கமுன பிரதேசத்தில் ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பக்கமுன பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளான ஒன்றரை வயது சிறுமி முன்னதாக தனது பாட்டியின் பராமரிப்பில் வெயாங்கொடையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து பக்கமுன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ காட்சிகளை பாட்டிக்கு பலமுறை […]

இலங்கை செய்தி

உயர் தர பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களின் பரிதாப நிலை

  • April 11, 2023
  • 0 Comments

உயர் தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார். விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏறபட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி […]

இலங்கை செய்தி

அடுத்த வாரம் முதல் தொடர் தொழிற்சங்க போராட்டம்!! இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் சமீபத்திய வரித் திருத்தம் தொடர்பான தொழிற்சங்கங்களுக்கும்  நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற கலந்துரையாடல் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்தது. இதனையடுத்து, தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும். இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பை தொடர்ந்து, தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் அருண சாந்தஆர்ச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கலந்துரையாடலின் போது எதிர்பார்த்த தீர்வுகள் முன்மொழியப்படவில்லை. இதேவேளை, சுகாதாரம் மற்றும் தபால் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் எதிர்வரும் வாரத்தில் வேலைநிறுத்தப் […]

இலங்கை செய்தி

மனைவியிடம் காசு வாங்க குழந்தையை அடித்து துன்புறுத்திய தந்தை

  • April 11, 2023
  • 0 Comments

ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஷ் ரொஹான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (10) ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தை பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவியிடம் இருந்து பணம் பெறுவதற்காக, […]

இலங்கை செய்தி

கொழும்பில் ரயில் கழிவறைக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி  இருந்து பயணித்த விரைவு ரயிலின் கழிவறைக்குள் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் கைவிடப்பட்ட சிசு இரவு 7.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சிசு  கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.