இந்தியா செய்தி

இலங்கைக்கு கடன் உத்தரவாதத்தை வழங்கிய நான்கு நாடுகள்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை தொடர்பில் மேலும் நான்கு நாடுகள் சர்வதேச நாணயநிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளjதாக  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா பாக்கிஸ்தான் ஹங்கேரி குவைத் ஆகிய நாடுகள் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

நாமல் ஒரு புரொய்லர் கோழி; விமல் வீரவன்ஸ கடும் விமர்சனம்!

  • April 11, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது விமல் வீரவன்ச மேலும் கூறுகையில்,மக்கள் துன்பப்படும் வேளையில் பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் ராஜபக்ஷ கிரிக்கட் விளையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், நாமல் ராஜபக்ச  ரணிலைப் போன்று செயற்படுவது மாத்திரமின்றி […]

இலங்கை செய்தி

கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் !

  • April 11, 2023
  • 0 Comments

பிலியந்தலை சுவாரபொல வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கைகள் துணியால் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 27 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் சண்டையிட்ட அவர் தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (15) இடம்பெறவுள்ள நிலையில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கையில் மேலதிக சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்துகள்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத துறையினர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட்டுள்ளதால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் பொது மக்களின் நலன்கருதி மேலதிக பேருந்துகளை […]

இலங்கை செய்தி

மஹிந்தவின் மனதில் உள்ள விடயத்தை வெளிப்படுத்திய ரணில்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை இந்த அரசில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசின் கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் நாளுக்கு நாள் வதந்திகளை வெளியிடுவார்கள். அதில் ஒன்றுதான் மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் அடங்கும் என்று நான் நினைக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் கொடுப்பதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் மாற்றம்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்து வருகின்றது. தற்போது கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 160,000 ரூபா விலை அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 134,000 ஆக குறைந்தது. இதேவேளை, கடந்த வியாழக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 145,000 ரூபாவாக இப்போது நேற்று அதன் […]

இலங்கை செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கு கடுமையாகும் சட்டம்!

  • April 11, 2023
  • 0 Comments

அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கடமை புரியும் அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதினூடாக நாட்டின் சட்டத்தை மீறினால், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். கடந்த வாரமும் நாடு முழுவதும் வழமையான செயற்பாடுகள் […]

இலங்கை செய்தி

பொலிஸ் மா அதிபரை நியமிப்பது நான் அல்ல!! மகிந்த ராஜபக்ச

  • April 11, 2023
  • 0 Comments

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வது தாம் அல்ல, ஜனாதிபதி மற்றும் சட்ட சபையை தெரிவுசெய்வதுடன், தலைசிறந்த அதிகாரி ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார் என தாம் நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலையில் இடம்பெற்ற […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் கோடீஸ்வர வர்த்தகரும் இளம் பெண்ணும் எடுத்த தவறான முடிவு

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையின் கோடீஸ்வர் உரிமையாளரும் , அந்த கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உட்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புப்புக்கான காரணம் தெரிய வரும். 22 வயதான பெண் உயிரிழந்த ஒரு மணி நேரத்தில் குறித்த கோடீஸ்வர வர்த்தகரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மரணங்களுக்கும் தொடர்பு உள்ளதாக என பொலிஸார் விசாரித்து […]

இலங்கை செய்தி

இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பாடப்பட்ட சிங்கள பாடல்

  • April 11, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு பொதுநலவாய தினத்தை கொண்டாடும் வகையில் நேற்று (13) இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் சிங்களப் பாடலைப் பாடினர். வெஸ்ட் எண்ட் தயாரிப்பான ஹாமில்டன் படத்தில் பெக்கி கதாபாத்திரத்தில் நடித்த ரோஷனி அபேயும், வெஸ்ட் எண்ட் தயாரிப்பில் லைஃப் ஆஃப் பை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நுவன் பெரேராவும் இந்த நிகழ்ச்சியை வழங்கினர். இலங்கை மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு இடையிலான […]