இலங்கை செய்தி

பிரதமர் மற்றும் ஆளுனர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு

  • April 11, 2023
  • 0 Comments

340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலமானது மார்ச் 19ஆந் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதன் காரணமாக, அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கிடையேயும் ஆளுனர்களுக்கிடையேயுமான கலந்துரையாடலொன்று, அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் ஆளுனர்களான டிகிரி கொப்பேகடுவ (சப்பிரகமுவ), வசந்த கரன்னாகொட (வடமேல்), எம்.ஜே.எம்.முசம்மில் ( ஊவா ), மகிபால ஹேரத் (வடமத்திய), விலீ கமகே (தெற்கு), லலித் யு.கமகே (மத்திய), அநுராதா யகம்பத் (கிழக்கு), ரொஷான் குணதிலக (மேல்), ஜீவன் தியாகராஜா (வடக்கு) […]

இலங்கை செய்தி

வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை!

  • April 11, 2023
  • 0 Comments

நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தீர்மானித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) எழுத்து மூலம் திணைக்களத்திற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியிடம் அரசாங்க அச்சக அலுவலகம் பல தடவைகள் கோரிக்கை […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் மாபியாக்களின் செயற்பாடு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் நகை செய்யும் இடங்களில் உள்ள தங்கக்கழிவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்கள் இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் மாபொல பகுதியினை மையமாகக்கொண்டு இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் முறையான அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இவ்வாறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியர்களை இலங்கையினைச் சேர்ந்த சிலர் அச்சுறுத்துவதாகவும், அவர்களிடம் பெருந்தொகை பணத்தினை […]

இலங்கை செய்தி

யாழ் உரும்பிராய் பகுதியில் மூன்று சிறுமிகள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசிப்பதாகவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் […]

இலங்கை செய்தி

13 ஆவது திருத்தம் குறித்து பேசுவதற்காக மகாநாயக்க தேரர்களை சந்திக்க தயாராகும் தமிழ்த்தரப்புகள்!

  • April 11, 2023
  • 0 Comments

அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன் பதிலுக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பேசுவதை நிறுத்தியுள்ளார் என சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் அங்கிகாரம் 20ஆம் திகதி கிடைக்கப்பெறும் : நம்பிக்கையில் இலங்கை!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவி இலங்கைக்கு கிடைத்ததும் அடுத்த நான்கு வருடங்களில் இலங்கைக்கு7 பில்லியன் டொலர் கிடைக்கலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் வேகமாக முன்னேற்றம் காணப்படும் பட்சத்தில், அடுத்த நான்கு வருடங்களில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏழு மில்லியன் டொலர் என்பது நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிதியமைப்புகள் மற்றும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைக்கப்போகின்றது என தெரிவித்துள்ள அவர்,  அதிகளவு முதலீடுகளிற்கான வாய்ப்புகளை […]

இலங்கை செய்தி

வாகன இறக்குமதி குறித்து கலந்துரையாடல்!

  • April 11, 2023
  • 0 Comments

வாகன இறக்குமதி குறித்து கலந்துரையாடல்! வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் சாந்த கமகே தெரிவித்தார். வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். அதனை நிதியமைச்சே இறுதி செய்ய வேண்டும். எனவே குறித்த செயற்பாடுகள் நிதியமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் […]

இலங்கை செய்தி

யாழில் சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான மூன்று சிறுமிகள்!

  • April 11, 2023
  • 0 Comments

சிறுவர் இல்லத்தில் மூன்று சிறுமிகள் காணமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்திலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவர் இல்லத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளையே இவ்வாறு காணவிமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்றும் ஒருவர் உரும்பிராயை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலையத்தில் முறைப்பாடு

இலங்கை செய்தி

இலங்கைத் பெருந்தோட்ட தமிழர்கள் தொடர்பில் அண்ணாமலை வெளியிட்ட தகவல்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களுக்கு வீடமைத்து கொடுப்பதால் அவர்களின் வாழ்க்கைத்தரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படும் என பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டரில் பதிவில்,இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். “இந்தியாவில் இருந்து, சுமார் 200 வருடங்கள் முன்பு இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா 28 லட்ச ரூபா மதிப்பில், 4000 வீடுகளை […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவை விரைவில் ஆரம்பம்

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இதனை குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாணம் […]