வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களம் : ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு!
விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தின்ர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழ்க்கில் காலம்காலமாக மக்களால் புனித இடங்களாக போற்றி பாதுகாக்கப்பட்ட இடங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார். அதில், போருக்குப் பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்றுள்ள ஆக்கிரமிப்புக்கள் […]