தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார். இந்தச் சந்திப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பின் மூலம் எவ்வாறு அரசியலை நகர்த்தலாம் என்ற விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்தும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விரிவாக […]