கொழும்பில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் இருந்து குழந்தை கடத்தல்
கொழும்பில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் இருந்து ஒன்றரை மாத குழந்தை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேசத்தில் வைத்து கை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிசுவின் தாயும் தந்தையும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பிச்சைக்கார பெண் பம்பலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ரூபாவிற்கு குழந்தையை விற்க சிசுவின் தாய் சம்மதித்துள்ளார். […]