புலனாய்வு தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கைக்கு அழுத்தம்!
இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், அமெரிக்காவின் சி.ஐ.ஏ பிரிவின் பிரதான […]