இலங்கையில் எரிபொருள் விலை குறைவடையும் சாத்தியம்!
இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் எரிபொருளுக்கான விலை குறைவடையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிவாயு விலைகளும் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.