இலங்கை

தாயின் முறைகேடான கணவனால் கொல்லப்பட்ட வாய் பேச முடியாத சிறுமி

  • April 10, 2023
  • 0 Comments

பாணந்துறை பகுதியில் ஊமைச் சிறுமியொருவர் தாயின் பிரிந்த கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை ஹிரண, லேக் வியூ, பண்டாரகம கல்துடே, தம்மகித்தி ஆரம்ப பாடசாலையின் விசேட பிரிவில் கல்வி பயிலும் பல்பொல பகுதியைச் சேர்ந்த ரோஷினி கவிஷ்க பெரேரா என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் காணப்படுவதாகவும், வாயில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை இராணுவ […]

இலங்கை

வீரகெட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் – 7பேர் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

  • April 10, 2023
  • 0 Comments

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததாகக் கூறப்படும் மோதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஏழு பொதுமக்கள் மார்ச் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சந்தேகத்தின் பேரில் வீதியோரமாக காத்திருந்த நபர்களை சோதனையிட்ட போது இந்த நிலைமை ஏற்பட்டது. எவ்வாறாயினும், குறித்த நபர்கள் அவர்களைத் தேடும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தது, பின்னர் சம்பவம் கைகலப்பாக மாறுவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரிகளுடன் […]

இலங்கை

இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்தும் விமானங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கட்டணங்களை உயர்த்த துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஒரு கோடியே இருபது இலட்சம் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி  முதல் அமுலுக்குவரும் நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விமானக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்  […]

இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் திகதியை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு சற்றுமுன்னர் தீர்மானித்துள்ளது..

இலங்கை

பேரணியை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் Mar 07, 2023 11:18 am

  • April 10, 2023
  • 0 Comments

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் சற்று முன்னர் இந்த தாக்குதலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனமும் (IUSF) இந்த எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

டொலரின் பெறுமதியில் மாற்றம் : தங்கத்தின் விலையிலும் மாற்றம்!

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 315 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 335 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து தங்கத்தின் விலையும் சற்று வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி 24 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாவாகவும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 21 கரட் பவுண் […]

இலங்கை

ஜனாதிபதி உரை மீது 3 நாள் விவாதம் வேண்டும் – சஜித் கோரிக்கை

  • April 10, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பான விவாதத்தை அடுத்த அமர்வில் நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டுள்ளார்

இலங்கை

IMF ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்படும்

  • April 10, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடன்  ஒப்பந்தம்  செய்துகொள்ளப்பட்டதன்  பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும்   வீதி  வரைபடம்   என்பவற்றுடன்  அந்த ஒப்பந்தத்தை  பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக  ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உறுதியளித்தார் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு     பாராளுமன்ற  உரையின்  போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி , நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும்  பாராளுமன்றத்தில்  உறுதியளித்தார்

இலங்கை

சக மாணவனுக்கு மதிய உணவில் நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்த 6 மாணவர்கள் !

  • April 10, 2023
  • 0 Comments

மாணவன் ஒருவருக்கு மதிய உணவில் நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை 6 மாணவர்கள் சேர்ந்து கலந்து கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவனுக்கே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ் 6 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு செயலைச் செய்த ஆறு […]

இலங்கை

சீனா வழங்கிய வாக்குறுதி – இலங்கைக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு எழுத்து மூலமான ஆதரவை சீனா வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, இந்த எழுத்துமூல ஆதரவு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு மிக நெருக்கமானதாகவும், அதன் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதியை பெறுவதற்கு சாதகமான சூழ்நிலை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த எழுத்துப்பூர்வ ஆதரவின் மூலம் உரிய உத்தரவாதத்தைப் பெறுவதில் இருந்த மிகப் பெரிய தடை ஒன்று நீக்கப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.