சாதாரண தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க நேரிடும்
உயர்தரப் பொதுத் தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை திட்டமிட்டபடி முடிக்க முடியாவிட்டால் சாதாரண தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புத்திக பத்திரன எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போது நிலவும் பொருளாதாரச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்படும் தினசரி உதவித் தொகை போதாது எனக்கூறி உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதில் ஆசிரியர்கள் காலதாமதம் செய்தனர். […]