இலங்கை செய்தி

இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பாடப்பட்ட சிங்கள பாடல்

  • April 11, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு பொதுநலவாய தினத்தை கொண்டாடும் வகையில் நேற்று (13) இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் சிங்களப் பாடலைப் பாடினர். வெஸ்ட் எண்ட் தயாரிப்பான ஹாமில்டன் படத்தில் பெக்கி கதாபாத்திரத்தில் நடித்த ரோஷனி அபேயும், வெஸ்ட் எண்ட் தயாரிப்பில் லைஃப் ஆஃப் பை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நுவன் பெரேராவும் இந்த நிகழ்ச்சியை வழங்கினர். இலங்கை மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு இடையிலான […]

இலங்கை செய்தி

பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் – நான்கு ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கைது

  • April 11, 2023
  • 0 Comments

பொக்காவல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரவு 10 பாடசாலை மாணவர்களை (5 சிறுவர்கள் மற்றும் 5 பெண்கள்) கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பாடசாலையின் நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி கண்காணிப்பாளர்களை கண்டி பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது. இன்று (14) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக […]

இலங்கை செய்தி

விமலுக்கு எதிரான பிடியானையை மீளப் பெற்றது நீதிமன்றம்!

  • April 11, 2023
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

இந்தியா செய்தி

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி!

  • April 11, 2023
  • 0 Comments

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84 ஆகவும், விற்பனை பெறுமதி 335.68 சதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வந்திருந்தது. இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது

இலங்கை செய்தி

யாழில் இனங்காணப்பட்ட மோட்டார் குண்டு!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் குண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பகுதியில் இனங்காணப்பட்டதுடன், இது குறித்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

சட்டவிரோத பயணம் தொடர்பில் அவுஸ்ரேலிய தூவர் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை என தெரிவித்துள்ள அவர்,  ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்கடத்தல் என்பது புதிய விடயமல்ல பல வருடங்களாக காணப்படுகின்றது இலங்கை இந்த விடயத்தை கையாளும் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு எவராவது விரும்பினால்அதற்கான சிறிதளவு வாய்ப்பும் இல்லை என்பதை […]

இலங்கை செய்தி

  • April 11, 2023
  • 0 Comments

புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் தீர்மானித்திருந்தது. இந்த நிலையிலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை செய்தி

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி எரிபொருள் துறையில் ஏற்றுமதி, சேமிப்பு, இறக்குமதி மற்றும் விநியோகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அதற்காக  தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள்  அரசாங்கத்தினால் அடையாளம் […]

இலங்கை செய்தி

தினேஷ் சாப்டரின் மரண விசாரணை ஒத்திவைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

பிரபல தொழிலதிபர தினேஷ் சாப்டரின் மரணம் குறித்த விசாரணைகளை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இதன்படி குறித்த மரண விசாரணை எதிர்வரும் 22 திகதிவரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐந்து பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இலங்கை செய்தி

யாழில் பொதுமக்கள் மற்றம் பொலிஸாரிடையே கைகலப்பு; துப்பாகியை பயன்படுத்திய பொலிஸார் !

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14) நடைபெறவுள்ளது.அந்தநிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]