இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – சுனில் ஹந்துனெத்தி

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவுகளை மேலும் வளர்க்க அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணக்கம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 28) கொழும்பு 07, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார். கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் அவர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிக்கு வருகை தந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் […]

இலங்கை செய்தி

மீண்டும் குறையும் பால்மாவின் விலை!

  • April 12, 2023
  • 0 Comments

அண்மையில் பால்மாவிற்கான விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பால்மாவின் விலை குறைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்கவில் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு  தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள்   கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும்  கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL -226 இல் துபாயிலிருந்து   கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பின்னர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான தமது ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள பீடத்தில் ஷ வழங்கியுள்ளனர். இதன்போது அவர்களின் கடவுச்சீட்டில் […]

இலங்கை செய்தி

கச்சைத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம் : யாழ் செயலருக்கு கடிதம்!

  • April 12, 2023
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு வலியுறுத்தியுள்ளார். யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணமே கோரிக்கை அடங்கிய கடிதத்தை யாழ்ப்பாண செயலருக்கு அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில்  புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரச மரங்கள் நாட்டப்ட்டுள்ளதாகவும் நம்பகரமான செய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன. இதுபற்றி ஆராய்ந்து முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்திய […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைவடையவுள்ளதாக அறிவிக்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார் இன்று இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் விலை 325 […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் வரிசை மீண்டும் ஆரம்பம்?

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

வவுனியாவில் நாளை மாபெரும் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியாவில் நாளைய தினம் இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதற்கு அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆதிலிங்கேஸ்வரர் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியியதாகவும் கூறினார். குறிப்பாக வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது […]

இலங்கை செய்தி

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் – விசாரணையில் வெளிவந்த தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இரத்தினபுரி நிரியல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய நிபுணர் முதித குடாகம தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், யுவதியின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடலில் காயங்கள் ஏதும் […]

இலங்கை செய்தி

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள திருப்பம் – மீண்டும் இணையும் பிரபலங்கள்

  • April 12, 2023
  • 0 Comments

மைத்திரிபால சிறிசேனவை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்தாலும்கூட அதையெல்லாம் மறந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அரசுடன் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களே இந்த ஒப்பரேஷனில் இறங்கியுள்ளனர். இவர்கள் சில நாட்களுக்கு முன் மைத்திரியைச் சந்தித்து இந்த விவகாரம் பற்றி விரிவாகப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின் விளைவாக ரணிலும் […]