கேக்கின் விலையும் குறைக்கப்படலாம்!
புத்தாண்டு காலத்தில் கேக்கின் விலையை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பேக்கரி தொழிலுக்கு தேவையான முட்டை வரத்து தொடர்ந்தும் சீராக இருந்தால் கேக்கின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். முன்னதாக கேக் கொள்வனவு குறித்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.