தனது ஐந்து பிள்ளைகளை கொன்ற பெல்ஜிய தாய் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கருணைக்கொலை
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வழக்கில் தனது ஐந்து குழந்தைகளைக் கொன்ற பெல்ஜியப் பெண், அவர்கள் கொல்லப்பட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சொந்த வேண்டுகோளின் பேரில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞர் வியாழக்கிழமை இதனை தெரிவித்தார். பிப்ரவரி 28, 2007 அன்று நிவெல்லெஸ் நகரில் உள்ள குடும்ப வீட்டில் ஜெனிவிவ் லெர்மிட் தனது மகன் மற்றும் மூன்று முதல் 14 வயதுடைய நான்கு மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்தார். பின்னர் அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார், […]