ஐரோப்பா செய்தி

மொண்டினீக்ரோவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக மிலாடோவிக் தெரிவித்துள்ளார்.

  • April 15, 2023
  • 0 Comments

மொண்டினீக்ரோவின் முன்னாள் பொருளாதார அமைச்சர் ஜகோவ் மிலாடோவிக், தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளார். நீண்ட காலமாக தற்போதைய பதவியில் இருந்த மிலோ டிஜுகனோவிச்சை எதிர்த்து, சிறிய பால்கன் குடியரசில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது எனவும் கூறியுள்ளார். ஐரோப்பா நவ் இயக்கத்தின் துணைத் தலைவரான 37 வயதான மேற்கத்திய கல்வி கற்ற மிலாடோவிக், ஊழலைக்  கட்டுப்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சக முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசு செர்பியாவுடனான […]

செய்தி தமிழ்நாடு

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கட்டுமான உரிமையாளர்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டம் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா காஞ்சிபுரம் மையத்தின் கட்டுமான உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காஞ்சிபுரம், சென்னை,பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  தனியார் மண்டபத்தில் நடைபெற்றன. 2023-2024 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளை அகில இந்திய தலைவர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், மு.மோகன், முன்னாள் தலைவர் பிஸ்மா ஆகியோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் […]

ஐரோப்பா செய்தி

போலந்து அதிபரை சந்திக்கும் செலன்ஸ்கி!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி வரும் புதன் கிழமை போலந்துக்கு பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின்போது போலந்து அதிபர் டுடாவை சந்திக்கும் அவர், பாதுகாப்பு நிலைமை, பொருளாதாரம், அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் போலந்தில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் பிரஜைகளையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலந்தும், உக்ரைனும் வரலாற்று ரீதியாக உறவு கொண்டுள்ளதுடன், போரின்போது 1 மில்லியன் உக்ரைன் மக்கள் போலந்திற்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி தமிழ்நாடு

ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் குற்ற வழக்கு சம்பந்தப்பட்ட ரவுடிகள் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் 19 ரவுடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்து 10 ரவுடிகளை காஞ்சிபுரம் கிளை சிறையிலும், 9 பேர் புழல் சிறையிலும் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் காஞ்சிபுரம் பகுதியை […]

ஐரோப்பா செய்தி

பின்லாந்து தேர்தல்:93.4 சதவீத வாக்குகளுடன் எதிர்க்கட்சி வெற்றி

  • April 15, 2023
  • 0 Comments

பின்லாந்து நாட்டில் பிரதமராக சன்னா மரீன் (37) இருந்து வருகிறார். அந்நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பெண் பிரதமரான அவர் மக்களிடம் அதிக செல்வாக்குடன் காணப்பட்டார். எனினும், அந்நாட்டின் கடன் அதிகரித்து உள்ளது என ஆர்ப்போ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களால் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தொடர்ந்து பொது செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டது. இந்த நிலையில், பின்லாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், பெட்டேரி ஆர்ப்போ […]

செய்தி தமிழ்நாடு

வெள்ளி தேர் உற்சவ வழிபாட்டில் திரளான அதிமுகவினர் பங்கேற்று வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

  • April 15, 2023
  • 0 Comments

அதிமுக பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி  காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர். வெள்ளி தேர் உற்சவ வழிபாட்டில் திரளான அதிமுகவினர்  பங்கேற்று வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் வழக்குகள் என பல்வேறு இடர்பாடுகளைக் வெற்றியுடன் கடந்து, அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு,அதிமுக பொதுச் செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி அதிமுக கழக அமைப்பு செயலாளர் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் நடந்த வெடிப்பில் புட்டினின் உதவியாளர் பலி

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இராணுவ உதவியாளராக பணியாற்றிய வலைப்பதிவர் சேவை வழங்குநர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடிப்பில் மேலும் இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் படையெடுப்பின் போது, ​​மாக்சிம் ஃபோமின் அல்லது விளாட்லான் டாடர்ஸ்கி என்ற நபர், ரஷ்ய ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைய வலைப்பதிவு மூலம் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள பணியாற்றினார். அவரை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என ரஷ்ய பாதுகாப்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சிறிய தவறால் ஏற்பட்ட விபரீதம்

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை சேர்ந்த Tom Arnold என்னும் முதியவர் இணையம்வழி தவறுதலாக 60 வாசிப்புக் கண்ணாடிகளை வாங்கியுள்ளார். அந்தத் தகவலை அவரது மகன்  Chris Arnold தமது Twitter பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு இதுவரை 2 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. 10 அல்லது 12 கண்ணாடிகள்தான் வாங்குவதாக அவரது அப்பா நினைத்திருந்தாராம். ஆனால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட கண்ணாடிகளின் எண்ணிக்கையைப் பார்த்தபிறகுதான் அவர் அதிர்ச்சியடைந்ததாகக் கிறிஸ் கூறினார். நானும் எனது மனைவியும் வாசிப்புக் கண்ணாடிகளை அடிக்கடி தவறவிடுவதுண்டு. எனவே […]

செய்தி தமிழ்நாடு

வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழப்பு

  • April 15, 2023
  • 0 Comments

நடிகர் சத்தியராஜின் சகோதரிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழப்பு. கோவை நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டின் நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழந்துள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் நாயக்கன்பாளையத்தில் அபராஜிதா(சத்தியராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தோட்டத்து வீடும்(farmhouse) உள்ளது.  இங்கு எப்போதாவது தான் அவர்கள் வந்து செல்வார்கள் என தெரிகிறது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டமும் தென்படும். இந்நிலையில் அந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 3 ஆண்டுகளாக கூடாரத்தில் தங்கி நிதி திரட்டிய சிறுவன்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் புற்று நோயினால் மரணமடைந்த தனது நண்பனை கவனித்துக் கொண்ட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக மூன்று வருடங்கள் வீட்டை விட்டு கூடாரத்தில் கழித்து சிறுவன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்தச் சம்பவம் உலகெங்கிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரித்தானியாவில் நாட்டைச் சார்ந்த 13 வயது சிறுவனான மேக்ஸ் வூசி தான் இந்த சாதனையை புரிந்து இருக்கிறார். இவர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது வீட்டிலிருந்து வெளியேறி கூடாரத்தில் சென்று தங்க ஆரம்பித்தார். […]