ஐரோப்பா செய்தி

இத்தாலி கடலோர காவல்படை 1,200 புலம்பெயர்ந்தோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது

  • April 16, 2023
  • 0 Comments

வட ஆபிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடலை கடக்கும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, இத்தாலிய கடலோர காவல்படை மொத்தம்  கடந்த வார இறுதியில்1,200 பேரை ஏற்றிச் செல்லும் இரண்டு படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 400 பேரை ஏற்றிச் செல்லும் படகுகளில் ஒன்று, தெற்கு இத்தாலியின் கலாப்ரியா கடற்கரையில் உள்ள அயோனியன் கடலில் உள்ளதாகவும், இது முன்னர் மால்டா கடல் பகுதியில் பயணித்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, லிபியாவில் உள்ள டோப்ரூக்கில் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் மீட்புப் பணியாளர்கள் இடிந்து விழுந்த மார்சேய் கட்டிடத்தில் 6வது சடலத்தை கண்டெடுத்துள்ளனர்

  • April 16, 2023
  • 0 Comments

வெடிவிபத்தைத் தொடர்ந்து இடிந்து விழுந்த பிரான்ஸ் தெற்கு நகரமான மார்சேயில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஆறாவது சடலத்தை பிரான்ஸ் மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டிடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து எட்டு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்தனர். இந்த அனர்த்தம்  இரண்டு குடியிருப்பு கட்டிடங்களை முழுமையாக சேதப்படுத்தியது. எனினும் இந்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணாம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்த அனர்த்தத்தில் சிக்குண்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதானது கடினமான மற்றும் […]

ஐரோப்பா செய்தி

வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தால் சுகாதார சேவை பாதிப்பை எதிர்நோக்குகிறது இங்கிலாந்து

  • April 16, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில்  உள்ள இளம் வைத்தியர்களின் ஊதியம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நான்கு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த செயற்பாடானது அந்நாட்டின் சுகாதார சேவைக்கு முன்னோடியில்லாத இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும்,  இது நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான இளம் வைத்தியர்கள், மருத்துவப் பணியாளர்களில் ஏறக்குறைய பாதியை உள்ளடக்கிய தகுதிவாய்ந்த மருத்துவர்கள் ஒன்றிணைந்து ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியர்களை  பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (பி.எம்.ஏ) 35 சதவீத உயர்வை கோருகின்றது.

ஐரோப்பா செய்தி

இராணுவ அணிதிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய பிரஜைகள் இருவருக்கு 19 ஆண்டுகள் சிறை!

  • April 16, 2023
  • 0 Comments

இராணுவ அணிதிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இராணுவ பதிவு மேசை அமைந்துள்ள கட்டடத்திற்கு தீ வைத்த இரு இளைஞர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோமன் நஸ்ரியேவ் மற்றும் அலெக்ஸி நூரிவ் ஆகியோர் கடந்த அக்டோபரில் செல்யாபின்ஸ்க் பகுதியில், பாக்கலில் உள்ள கட்டடத்திற்கு தீ வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சாட்டப்பட்ட இருவருக்கும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமைக் குழுவான சாலிடாரிட்டி சோன், இது போருக்கு எதிரான தீக்குளிப்பு […]

ஐரோப்பாவிற்கான மின்சார ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்கும் உக்ரைன்!

  • April 16, 2023
  • 0 Comments

ஐரோப்பாவிற்கான மின்சார ஏற்றுமதியை உக்ரைன் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதத்தில் உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களின் காரணமாக ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் ஏற்றுமதிகள் ஆரம்பித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ ரஷ்யா எங்கள் எரிசக்தி அமைப்பை அழிப்பதில் வெற்றிப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஏற்றுமதிகள் தொடங்கினாலும், உள்நாட்டு மக்களுக்கு மின்சாரம் வழங்குவது நாட்டின் முன்னுரிமையாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் 8500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவிப்பு!

  • April 16, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து  8500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக  பிப்ரவரி 2022 இல் இருந்து இதுவரையான காலப்பகுதியில், 8490 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், ஐ.நா தெரிவித்துள்ளது. பெரும்பாலான இறப்புகள் உக்ரேனிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்திலும் ரஷ்யப் படைகளின் தாக்குதலின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டொனெஸ்க் மற்றும் லுகான்ஸ் பகுதிகளில் 3927 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் கண்மூடித்தனமான மற்றும் […]

ஐரோப்பா செய்தி

மின்னணு இராணுவ அழைப்பு முறையை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!

  • April 16, 2023
  • 0 Comments

மின்னணு இராணுவ அழைப்பு முறையை ரஷ்யா அறிமுகப்படுத்தவுள்ளது.  இதன்மூலம் பலர் இராணுவத்தில் சேரலாம் என ரஷ்யா நம்பிக்கைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வரைவு இன்று விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த முறை அணித்திரல் நடவடிக்கையை எளிதாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னியலுக்கான சம்மன் கிடைத்தவுடன், இராணுவப் பதிவு அலுவலகத்தில் ஆஜராகத் தவறிய குடிமக்கள் தானாகவே வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படும் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய படையெடுப்பினால் 11 மில்லியன் அகதிகள் போலந்தில் தஞ்சம்!

  • April 16, 2023
  • 0 Comments

ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து மில்லியன் கண்க்கான உக்ரேனிய  அகதிகள் போலத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஏறக்குறைய 11 மில்லியன் அகதிகள் போலந்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் 87 வீதமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என போலந்து  பிரதிநிதி வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை  போரில் இருந்து தப்பியோடிய அனைவருக்கும் போலந்தில் தங்குமிடம் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

உக்ரைன் நகரைச் சுற்றி பிரம்மாண்ட அகழிகளை தோண்டும் புடின்: அச்சத்தில் எடுத்துள்ள நடவடிக்கை

  • April 16, 2023
  • 0 Comments

புடின் கூலிக்கு அமர்த்தியுள்ள பணியாளர்கள், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளைச் சுற்றி, முதல் உலகப்போரில் நடந்தது போல அகழிகள் தோண்டி வருகிறார்கள். உக்ரைனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள Zaporizhzhia பகுதியில் புடினால் பணிக்கமர்த்தபட்டுள்ள Kyrgyzstan நாட்டவர்களான பணியாளர்கள், முதல் உலகப்போர்க்காலத்தில் செய்யப்பட்டது போல அகழிகள் தோண்டிவருவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.அதேபோல, சேட்டிலைட் புகைப்படங்கள், Zaporizhzhia பகுதியில், சுமார் 45 மைல் தொலைவுக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. ரஷ்யா ஆக்கிரமித்துக்கொண்ட உக்ரைன் பகுதிகளை மீண்டும் உக்ரைன் வீரர்கள் கைப்பற்றிவிடுவார்களோ என்ற அச்சம் […]

ஐரோப்பா செய்தி

தரையிறங்கும் போது இயங்க மறுத்த முன் சக்கரங்கள்; நெருப்புப் பொறியுடன் தரையிறங்கிய விமானம்!

  • April 16, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து சென்ற ரையான் ஏர் விமானத்தின் முன்சக்கரம் இயங்காததால் நெருப்புப் பொறி பறக்க அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. லிவர்பூல் நகரில் இருந்து அயர்லாந்தின் டப்ளின் நகருக்கு ரையான் விமானம் புறப்பட்டுச் சென்றது. டப்ளின் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது, விமானத்தின் முன்சக்கரங்கள் இயங்காதது தெரியவந்தது. ஆனாலும் விமானி விமானத்தை அவசரமாகத் தரை இறக்கினார். இதனால், நெருப்புப் பொறி பறக்க ஓடுதளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் விமானம் நிறுத்தப்பட்ட பிறகு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதனால் தீயணைப்பு வாகனம் மற்றும் […]