உக்ரைன் இழந்த பகுதிகளை மீட்பதே அமைதி ஏற்பட ஒரே வழி – டிமிட்ரி குலேபா!
உக்ரைன் இழந்த அனைத்து நகரங்களையும் – அதே போல் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையும் – நாட்டின் எல்லைகளை மீட்டெடுப்பதன் மூலம் உண்மையான அமைதியை ஏற்படுத்த முடியும் என வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா தெரிவித்துள்ளார். புக்கரெஸ்டில் நடந்த கருங்கடல் பாதுகாப்பு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். ரஷ்யப் படைகளால் உக்ரேனிய போர்க் கைதியின் தலை துண்டிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அவர் பேரிழிவுகள் ஏற்படுவதை காட்டுவதாகவும் […]