மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டை மீறி அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரஷ்யா
மேற்கத்திய நாடுகளின் தடை விலை உச்சவரம்பு போன்ற நெருக்குதல்களைத் தாண்டி ரஷ்யா அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை செய்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக ரஷ்யா தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் 5 லட்சம் பேரலைக் குறைத்தது. அதே நேரத்தில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்தது. பேரலுக்கு 60 டாலர் என்று ஐரோப்பிய யூனியன் விலை நிர்ணயம் செய்ததை ஜி7 நாடுகளும்இ ஆஸ்திரேலியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. […]